தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சூப்பர் 8 சுற்றுக்குத் தகுதி பெற்றது தென்னாப்பிரிக்கா

1 mins read
af104e73-c412-4187-ae98-813db96d4e31
கடைசி ஓவரில் 11 ஓட்டங்கள் எடுக்க வேண்டிய நிலையில் தென்னாப்பிரிக்காவின் கே‌சவ் மகாராஜ் 6 ஓட்டங்கள் மட்டுமே கொடுத்தார். - AFP

நியூயார்க்: டி20 கிரிக்கெட் உலகக் கிண்ணப் போட்டியில் ‘டி’ பிரிவில் தென்னாப்பிரிக்க அணியும் பங்ளாதே‌‌ஷும் மோதின.

அதில் தென்னாப்பிரிக்கா நான்கு ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று முதல் அணியாக சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்று அசத்தியுள்ளது.

பூவா தலையாவில் வென்ற தென்னாப்பிரிக்க அணி முதலில் பந்தடிப்பைத் தேர்வு செய்தது. அந்த அணியின் துவக்க நிலை வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறியதால் 23 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகள் இழந்து தடுமாறியது.

அதன் பின்னர் ஜோடி சேர்ந்த டேவிட் மில்லர், கிளாசன் கூட்டணி பொறுமையாக விளையாடி ஓட்டங்கள் குவித்தது. இருப்பினும் அந்த அணியால் 20 ஓவர்களில் 6 விக்கெட் இழந்து 113 ஓட்டங்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. அதிகபட்சமாக கிளாசன் 46 ஓட்டங்கள் குவித்தார்.

எளிய இலக்கை விரட்டிய பங்ளாதே‌‌‌ஷுக்கு தென்னாப்பிரிக்க ப ந்துவீச்சாளர்கள் கடும் நெருக்கடி கொடுத்தனர். பங்ளாதே‌‌‌ஷ் ஓட்டங்கள் குவித்தாலும் தொடர்ச்சியாக விக்கெட்டுகளை இழந்தது.

கடைசி ஓவரில் 11 ஓட்டங்கள் எடுக்க வேண்டிய நிலையில் பங்ளாதே‌‌‌ஷ் 6 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது. 20 ஓவர்கள் முடிவில் பங்ளாதே‌‌‌ஷ் 7 விக்கெட் இழந்து 109 ஓட்டங்கள் மட்டும் எடுத்து தோல்வியடைந்தது.

கடினமான ஆடுகளத்தில் சிறப்பாக பந்தடித்த கிளாசன் ஆட்டநாயகன் விருதைத் தட்டிச்சென்றார்.

குறிப்புச் சொற்கள்