தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஐபிஎல்: நுழைவுச்சீட்டைக் காட்டினால் பேருந்தில் இலவசப் பயணம்

1 mins read
0499ad8f-785d-4092-abb2-9bd4dfeadc5a
சென்னை சேப்பாக்கம் எம்.ஏ. சிதம்பரம் விளையாட்டரங்கம். - படம்: ஊடகம்

சென்னை: இந்திய பிரிமியர் லீக் (ஐபிஎல்) 20 கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் உள்ளிட்ட பத்து அணிகள் பங்கேற்கின்றன.

இந்நிலையில், ஐபிஎல் ரசிகர்களுக்குத் தமிழகஅரசு இன்பந்தரும் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதன்படி, சென்னை சேப்பாக்கம் விளையாட்டரங்கில் நடைபெறும் போட்டிகளைக் காணச் செல்வோர் மாநகரப் பேருந்தில் அவ்விடத்திற்கு இலவசமாகச் சென்று வரலாம். போட்டி தொடங்குவதற்கு மூன்று மணி நேரம் முன்னரும் போட்டி முடிந்தபின் மூன்று மணி நேரம் பின்னரும் அவர்கள் இலவசமாகப் பயணம் செய்யலாம்.

அதற்கு, அவர்கள் தாங்கள் இணையம் வழியாக வாங்கிய நுழைவுச்சீட்டைக் காட்ட வேண்டும்.

மாநகர குளிர்சாதனப் பேருந்துகளுக்கு இது பொருந்தாது. தமிழக போக்குவரத்துத் துறையின் அறிவிப்பு ரசிகர்களை உற்சாகம் அடைய வைத்துள்ளது.

கடந்த ஐபிஎல் பருவத்தில் சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் இலவசப் பயணத்தை அறிமுகம் செய்தது நினைவுகூரத்தக்கது.

குறிப்புச் சொற்கள்