100 மீட்டர் ஓட்டத்தில் தாய்லாந்து வீரரின் வரலாற்றுச் சாதனை

1 mins read
e5bd168c-97f9-4282-9aba-cc178f9f6063
பந்தயத்தை 10 நொடிகளுக்குக் குறைவாக ஓடிய முதல் தென்கிழக்காசியராக பூரிபோல் பூன்சன் தற்போது திகழ்கிறார்.  - படம்: ஏஎஃப்பி

பேங்காக்: தாய்லாந்தின் விரைவோட்ட வீரரான பூரிபோல் பூன்சன், டிசம்பர் 11ல் நடைபெற்ற தென்கிழக்காசிய விளையாட்டுப் போட்டிகளின் ஆண்களுக்கான 100 மீட்டர் தகுதிச் சுற்றில் 9.94 வினாடிகளில் பந்தயத்தை முடித்துக்கொண்டார்.

பந்தயத்தை 10 வினாடிகளுக்குக் குறைவாக ஓடிய முதல் தென்கிழக்காசியராக அவர் தற்போது திகழ்கிறார்.

சுப்பாச்சலாசாய் தேசிய விளையாட்டரங்கில் நடந்த போட்டியில் பூரிபோல் இந்தச் சாதனையைப் படைத்துள்ளார்.

2009ஆம் ஆண்டின்போது இந்தோனேசியாவின் சூர்யோ அகுங் விபோவோ 10.17 வினாடியில் ஓட்டத்தை முடித்துப் படைத்த சாதனை, தற்போது பூரிபோலால் முறியடிக்கப்பட்டுள்ளது. அதனை அடுத்து பூரிபோல் இறுதிப் போட்டியை 10.00 வினாடியில் வென்றார். அவருக்கு அடுத்து இந்தோனேசியாவின் லாலு ஸோஹ்ரி, 10.25 வினாடியிலும் மலேசியாவின் ரோஸ்லீ டேனிஷ் இஃப்திகார், 10.26 வினாடியிலும் போட்டியை முடித்தனர். ஆண்களுக்கான 100 மீட்டர் ஆட்டத்தில் சிங்கப்பூர் வீரர் மார்க் லுயிஸ், நான்காவது இடத்தில் போட்டியை முடித்து, பதக்கம் பெறும் வாய்ப்பை நழுவவிட்டார்.

குறிப்புச் சொற்கள்