தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

இந்தியா-ஆஸ்திரேலியா 3வது டெஸ்ட்: இரண்டு அணிகளிலும் இரண்டு மாற்றங்கள்

1 mins read
9c03a4a7-866a-498e-b8ca-f545230527ee
ஓட்டம் குவிக்கத் தடுமாறும் ராகுல் நீக்கப்பட்டு, அவருக்குப் பதிலாக ஷுப்மன் கில் சேர்க்கப்பட்டுள்ளார். கோப்புப்படம்: ஏஎஃப்பி -

இந்தூர்: இந்திய, ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி இன்று தொடங்குகிறது.

நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும் பங்கேற்க ஆஸ்திரேலிய அணி இந்தியா சென்றுள்ளது.

ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி முதலிரு டெஸ்ட் போட்டிகளிலும் வென்று, 2-0 என்ற முன்னிலையுடன் பார்டர்-கவாஸ்கர் கிண்ணத்தைத் தக்கவைத்துக்கொண்டது.

இந்நிலையில், முதலிரு போட்டிகளிலும் சரியாக விளையாடாத தொடக்க ஆட்டக்காரர் கே.எல்.ராகுல் நீக்கப்பட்டு, இளம் வீரர் ஷுப்மன் கில் இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். அதுபோல், வேகப் பந்துவீச்சாளர் முகம்மது ஷமிக்குப் பதிலாக உமேஷ் யாதவ் சேர்க்கப்பட்டுள்ளார்.

ஆஸ்திரேலிய அணியின் தலைவர் பேட் கம்மின்ஸ் சொந்தக் காரணங்களுக்காக தாய்நாடு திரும்பியுள்ளதால் மூன்றாவது போட்டிக்கு ஸ்டீவன் ஸ்மித் தலைமையேற்கிறார். கம்மின்ஸ் இல்லாத நிலையில், மிட்செல் ஸ்டார்க் அணிக்குத் திரும்பியுள்ளார். அதுபோல, டேவிட் வார்னருக்குப் பதிலாக ஆல்ரவுண்டர் கேமரன் கிரீன் விளையாடுகிறார்.

இந்நிலையில், ரோகித் சர்மா 912), ஷுப்மன் கில் (22), சேத்தேஸ்வர் புஜாரா (1) என, முதல் பத்து ஓவர்களுக்குள்ளேயே மூன்று விக்கெட்டுகளைப் பறிகொடுத்தது இந்தியா.