தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிராக இரு போட்டிகளில் மோதல்

இந்திய டெஸ்ட் அணியில் தமிழக வீரர்கள் மூவர்

2 mins read
0208c521-8296-4302-9947-7b20bd8beafb
வெஸ்ட் இண்டீஸ் அணியுடன் மோதவிருக்கும் இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியில் இடம்பெற்றுள்ள தமிழக வீரர்கள் (இடமிருந்து) வாஷிங்டன் சுந்தர், சாய் சுதர்சன், நாராயண் ஜெகதீசன். - படம்: இன்ஸ்டகிராம்/டிஎன்சிஏ

புதுடெல்லி: வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணிக்கெதிராக வரும் அக்டோபர் 2ஆம் தேதி தொடங்கவிருக்கும் இரு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

மொத்தம் 15 பேர் கொண்ட அவ்வணியில் சாய் சுதர்சன், வாஷிங்டன் சுந்தர், நாராயண் ஜெகதீசன் என மூன்று தமிழக வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.

இந்திய அணிக்கு மீண்டும் திரும்பியுள்ளார் கர்நாடக வீரர் தேவ்தத் படிக்கல். அதே நேரத்தில், இந்திய அணியின் இங்கிலாந்துச் சுற்றுப்பயணத்தில் இடம்பெற்றிருந்த இன்னொரு கர்நாடக வீரர் கருண் நாயர் நீக்கப்பட்டார்.

இங்கிலாந்து அணிக்கெதிரான நான்காவது டெஸ்ட் போட்டியின்போது காலில் காயமடைந்த விக்கெட் காப்பாளர் ரிஷப் பன்ட் இன்னும் முழுமையாகத் தேறவில்லை. அதனால், அணியின் முதன்மை விக்கெட் காப்பாளராக துருவ் ஜுரெல் அறிவிக்கப்பட்டுள்ளார். இன்னொரு விக்கெட் காப்பாளராக ஜெகதீசன் சேர்க்கப்பட்டுள்ளார்.

ஆறு மாத காலம் டெஸ்ட் போட்டிகளிலிருந்து விலகியிருக்கப் போவதாக ஷ்ரேயாஸ் ஐயர் அறிவித்திருப்பதையடுத்து, அவரது பெயர் பரிசீலனை செய்யப்படவில்லை எனக் கூறப்பட்டது.

ஆஸ்திரேலிய ‘ஏ’ அணிக்கெதிரான அதிகாரத்துவமற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியின்போது தலையில் காயமடைந்தபோதும் வேகப் பந்துவீச்சாளர் பிரசித் கிருஷ்ணா அணியில் இடம்பெற்றுள்ளார்.

முதல் டெஸ்ட் போட்டி அக்டோபர் 2ஆம் தேதி அகமதாபாத்திலும் இரண்டாவது போட்டி அக்டோபர் 10ஆம் தேதி டெல்லியிலும் தொடங்கவுள்ளன.

இந்திய அணி விவரம்: ஷுப்மன் கில் (தலைவர்), ரவீந்திர ஜடேஜா (துணைத்தலைவர்), கே.எல்.ராகுல், சாய் சுதர்சன், தேவ்தத் படிக்கல், துருவ் ஜுரெல், வாஷிங்டன் சுந்தர், ஜஸ்பிரீத் பும்ரா, அக்சர் பட்டேல், முகம்மது சிராஜ், பிரசித் கிருஷ்ணா, குல்தீப் யாதவ், நிதிஷ் குமார் ரெட்டி, என்.ஜெகதீசன்.

குறிப்புச் சொற்கள்