புதுடெல்லி: நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் டெஸ்ட் குழுவுக்கு அணித் தலைவராக இருந்த டிம் செளத்தி தற்போது அந்தப் பதவியில் இருந்து விலகியுள்ளார்.
வருகின்ற 16ஆம் தேதி இந்தியாவில் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் நியூசிலாந்து விளையாட உள்ள நிலையில் செளத்தி பதவி விலகலை அறிவித்துள்ளார்.
வேகப்பந்து வீச்சாளரான செளத்தி, அணியில் தொடர்ந்து விளையாடுவார் என்று தெரிவித்துள்ளார்.
நியூசிலாந்து கிரிக்கெட் அணியை 14 டெஸ்ட் போட்டிகளில் செளத்தி வழிநடத்தியுள்ளார். அதில் ஆறு வெற்றி, ஆறு தோல்வி, இரண்டு சமநிலையில் முடிந்தன.
அண்மையில் இலங்கை அணிக்கு எதிரான இரண்டு ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-0 என்று நியூசிலாந்து தோற்றது. இது நியூசிலாந்து அணியின் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிக்கு பின்னடைவை ஏற்படுத்தியது.
இந்நிலையில் டெஸ்ட் குழுவுக்கு டாம் லாதம் அணித் தலைவராக அறிவிக்கப்பட்டுள்ளார். அவர் ஏற்கெனவே நியூசிலாந்து டெஸ்ட் அணியை 9 ஆட்டங்களில் வழிநடத்தியுள்ளார்.

