சர்வதேச டெஸ்ட் வீரர்கள் தரவரிசையில் முன்னணி இந்திய விளையாட்டாளர்கள் 

டெஸ்ட் கிரிக்கெட் வீரர்களுக்கான தரவரிசை பட்டியலை ஐ.சி.சி. தமது இணையப் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

இதில், பேட்ஸ்மேன்களில் இந்திய கேப்டன் விராட் கோலி 5 வது இடத்திலும், ரிஷப் பண்ட் மற்றும் ரோகித் சர்மா கூட்டாக இணைந்து 6-வது இடத்திலும் நீடிக்கின்றனர்.

வரும் ஜூன் 18-ம் தேதி தொடங்கும் நியூசிலாந்துக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் விராட் கோலி தலைமையில் இந்தியா களமிறங்க உள்ளது.

6-வது இடத்தைப் பெற்றுள்ள ரி‌ஷிப் பண்ட்டும் ரோகித்தும் தலா 747 மதிப்பீட்டு புள்ளிகளைப் பெற்றுள்ளனர்.

பந்துவீச்சாளர் தரவரிசையில் தமிழக வீரர் அஸ்வின் மட்டும் 2வது இடத்தில் நீடித்து, டாப் 10 வரிசையில் இருக்கும் ஒரே இந்திய வீரர் ஆவார்.

அதேபோல் ஆல்-ரவுண்டர் தரவரிசையில் இந்திய வீரர்கள் ரவீந்திர ஜடேஜா 2வது இடத்திலும், ரவிச்சந்திரன் அஸ்வின் 4வது இடத்திலும் தொடர்ந்து நீடிக்கின்றனர்.

347 பந்துகளில் 200 ரன்கள் எடுத்த நியூசிலாந்தின் டெஸ்ட் அறிமுக வீரர் டேவன் கான்வே டெஸ்ட் பேட்டிங் தரவரிசையில் 447 புள்ளிகளுடன் 77வது இடத்தில் நுழைந்துள்ளார்.

நியூசிலாந்தின் கேப்டன் கேன் வில்லியம்சன் 895 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார்.

மேல் விவரம்: https://www.icc-cricket.com/rankings/mens/player-rankings/test

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!