நடுவர் குறித்த கருத்துகள் தொடர்பாக டோட்டன்ஹம் அணி நிர்வாகி டுடோர் மீது நடவடிக்கை

நடுவர் குறித்த கருத்துகள் தொடர்பாக டோட்டன்ஹம் அணி நிர்வாகி டுடோர் மீது நடவடிக்கை

1 mins read
5f9ad9fd-2b98-4b77-9baf-03503fa1866d
டோட்டன்ஹம் ஹாட்ஸ்பர் அணியின் இடைக்கால நிர்வாகி இகோர் டுடோர். - படம்: ராய்ட்டர்ஸ்

லண்டன்: இந்த மாதத் தொடக்கத்தில் ஃபுல்ஹம் அணியிடம் 2-1 என்ற கோல் கணக்கில் பிரிமியர் லீக் போட்டியில் தோல்வியடைந்த பிறகு, ஆட்டத்தின் நடுவரைப் பற்றி கருத்து தெரிவித்ததற்காக டோட்டன்ஹம் ஹாட்ஸ்பர் அணியின் இடைக்கால நிர்வாகி இகோர் டுடோர் மீது முறைகேடு குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளதாக இங்கிலாந்து காற்பந்துச் சங்கம் வியாழக்கிழமை (மார்ச் 19) தெரிவித்தது.

“இன்றைய நடுவரை எனக்குப் பிடிக்கவில்லை, அவர் உள்ளூர் அணிக்கு ஆதரவான நடுவராகவே இருந்தார்,” என்று மார்ச் 1ஆம் தேதி அன்று நடந்த போட்டிக்குப் பிறகு டுடோர் பிபிசியிடம் கூறினார்.

“அனைத்து முடிவுகளும் அவர்களுக்குச் சாதகமாகவே இருந்தன. நடுவருக்குக் காற்பந்து புரியவில்லை; எது சரி, எது தவறு என்ற உணர்வும் புரியவில்லை,” என்று டுடோர் கூறியிருந்தார்.

அவரது கருத்துகள் “ஒரு போட்டி அதிகாரி தொடர்பாகப் பாரபட்சத்தைக் குறிக்கின்றன மற்றும்/அல்லது நேர்மையைக் கேள்விக்குள்ளாக்குகின்றன மற்றும்/அல்லது தனிப்பட்ட முறையில் புண்படுத்துகின்றன,” என்று கூறிய இங்கிலாந்து காற்பந்துச் சங்கம், மார்ச் 23ஆம் தேதிக்குள் அதன் தொடர்பின் தனக்குப் பதிலளிக்குமாறு டுடோருக்கு அவகாசம் அளித்துள்ளது என்று ராய்ட்டர்ஸ் செய்தி கூறியது.

லீக்கில் 16வது இடத்தில் உள்ள டோட்டன்ஹம் அணி, ஞாயிற்றுக்கிழமை நாட்டிங்ஹம் ஃபாரஸ்ட் அணியை எதிர்கொள்கிறது.

குறிப்புச் சொற்கள்