தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சாம்பியன்ஸ் லீக் இறுதிப் போட்டியில் இரு ஜாம்பவான்கள்

2 mins read
99f3c1fb-97f1-4b92-915d-9a51e5255c77
சனிக்கிழமை (மே 31) நடைபெறும் சாம்பியன்ஸ் லீக் இறுதிப் போட்டியில் இண்டர் மிலானின் தலைமைப் பயிற்றுவிப்பாளர் சிமோன் இன்சாகியும் பிஎஸ்ஜியின் தலைமைப் பயிற்றுவிப்பாளர் லூயிஸ் என்ரிக்கும் விருதைக் கைப்பற்ற தங்களது சிறப்பு உத்திகளைப் பயன்படுத்துவார்கள். - படங்கள்: இணையம்

சாம்பியன்ஸ் லீக் காற்பந்துப் போட்டிகள் மாறுபட்டதாக இருக்க வேண்டும். இல்லையெனில் அதில் விறுவிறுப்பு இருக்காது. இருப்பினும், அண்மை காலமாக, இரண்டு குழுக்கள் இப்போட்டியில் ஆதிக்கம் செலுத்தி வந்துள்ளன

நான்கு ஆண்டுகளாக ரியால் மட்ரிட் அல்லது மான்செஸ்டர் சிட்டி இல்லாமல் ஓர் இறுதிப் போட்டி நடந்ததில்லை. கடந்த நான்கு ஆண்டுகளாக இக்குழுக்களில் ஏதாவது ஒன்று இறுதிப் போட்டியில் வெற்றியாளரானதில்லை.

2014 முதல், ஸ்பெயின் அல்லது இங்கிலாந்து குழுக்கள் இந்தப் போட்டியில் வென்றுள்ளன. இதில் ஒரே விதிவிலக்கு ஜெர்மனியின் பயர்ன் மியூனிக், ஆனால் 2020ல் பெருந்தொற்றுக் காலச் சூழ்நிலைகளால் அக்குழு பயனடைந்தது.

சனிக்கிழமை (மே 31) மியூனிக்கில் வேறு ஒரு வெற்றிக் குழு இருக்கும். பிரான்சின் பாரிஸ் செயிண்ட்-ஜெர்மைன் குழு இத்தாலியின் இன்டர் மிலான் குழுவைச் சந்திக்கிறது. ஒரு காலத்தில் உலகின் சிறந்த லீக்கான இத்தாலியின் ‘சிரி ஆ’விலிருந்து எந்தக் முழுவும் 15 ஆண்டுகளாகப் பட்டத்தை வெல்லவில்லை. பிரான்சின் லீக் 1லிருந்து கடைசியாக 1993ல் ஒரு குழு வெற்றியாளர் பட்டத்தைப் பெற்றது.

பிஎஸ்ஜி அடிப்படையில் மாறிவிட்டது. அண்மையில், உலக காற்பந்தின் தலைசிறந்த வீரர்களை தன் வசம் இழுப்பதை அது வெற்றிகரமாக மேற்கொண்டு வருகிறது. அதனால் அது அதிகபட்ச கவனத்தைப் பெற்றுள்ளது. அதன் கத்தார் உரிமையாளர்கள் தங்கள் பெருமையைப் போதுமான அளவு திருப்திப்படுத்திக் கொண்டதாகத் தெரிகிறது. அவர்கள் இப்போது உலகம் முழுவதும் அறியப்படுகிறார்கள். இப்போது அவர்கள் குழுவின் தலைமைப் பயிற்றுவிப்பாளர் லூயிஸ் என்ரிக் தனது வேலையைச் சிறப்பாகச் செய்து விருதைக் கைப்பற்ற முழு ஆதரவு அளித்துள்ளார்கள்.

இப்போது இன்டர் அணிக்குச் செல்வோம். அந்த அணி தொடர்ச்சியாக இரண்டாவது முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது. 2023ஆம் ஆண்டில் அவர்கள் எதிர்கொண்ட குழுக்களில் பலம் வாய்ந்தவையாக குறிப்பிட்டு சொல்லும் அளவுக்கு எதுவும் இல்லை.

ஆனால் இந்த முறை அந்த அணி பயர்ன் மியூனிக், பார்சிலோனா போன்ற பெரிய குழுக்களை வீழ்த்தியது. இத்தாலிய காற்பந்துக்குத் தேவையான அனைத்து சிறப்புகளையும் மனதிற்கொண்டு அது இதைச் சாதித்தது. அவர்களின் உத்திபூர்வ ஆட்டம் நன்றாக உள்ளது. அவர்கள் ஒரு குழுவாக விளையாடுகிறார்கள். தற்காப்பிலும் தாக்குதலிலும் அக்குழுவின் ஆட்டக்காரர்கள் முனைப்பு காட்டுகிறார்கள். அதுதான் இந்த முதிர்ச்சியடைந்த அணியின் வெற்றிக்கான காரணம்.

இது எப்படி இருப்பினும், ஒன்று மட்டும் மாறாது. சனிக்கிழமையன்று இண்டர் மிலானின் தலைமைப் பயிற்றுவிப்பாளர் சிமோன் இன்சாகியும் பிஎஸ்ஜியின் தலைமைப் பயிற்றுவிப்பாளர் லூயிஸ் என்ரிக்கும் தங்கள் திறமையை வெளிப்படுத்த தயங்கமாட்டார்கள்.

இந்த இறுதிப் போட்டியில் விறுவிறுப்புக்கும் திருப்பங்களுக்கும் பஞ்சமிருக்காது என்று கூறலாம்.

குறிப்புச் சொற்கள்