அகமதாபாத்: இந்தியாவில் நடந்துவரும் 13ஆவது உலகக் கிண்ண ஒருநாள் கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி 19ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அகமதாபாத் நகரில் நடக்கவுள்ளது.
இறுதிப் போட்டியில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் பொருதவுள்ளன.
இந்நிலையில், இறுதிப் போட்டிக்கான நடுவர்களை அனைத்துலக கிரிக்கெட் மன்றம் (ஐசிசி) அறிவித்துள்ளது.
அதன்படி, ரிச்சர்ட் இலிங்வொர்த்தும் ரிச்சர்ட் கெட்டில்பரோவும் கள நடுவர்களாகச் செயல்படுவர். இருவருமே இங்கிலாந்தைச் சேர்ந்தவர்கள். இவ்விருவருமே ஆண்டின் சிறந்த நடுவர்க்கான ஐசிசி விருதைத் தலா மும்முறை வென்றுள்ளனர்.
மூன்றாவது நடுவராக வெஸ்ட் இண்டீசின் ஜோயல் வில்சனும் நான்காவது நடுவராக நியூசிலாந்தின் கிறிஸ் கேஃபனேயும் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
ஸிம்பாப்வேயின் ஆண்டி பைக்கிராஃப்ட் ஆட்ட நடுவராக இருப்பார்.

