மான்செஸ்டர்: இங்கிலிஷ் பிரிமியர் லீக் காற்பந்துக் குழுவான மான்செஸ்டர் யுனைடெட், நொட்டிங்கம் ஃபாரஸ்ட்டுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் 3-2 எனும் கோல் கணக்கில் தோல்வியடைந்தது.
புதிய நிர்விாகி ருபன் அமோரிம்முக்குக்கீழ் முதலில் மீண்டுவரும் அறிகுறிகளைக் காண்பித்த யுனைடெட் மீண்டும் தடுமாறுகிறது. அதோடு, 30 ஆண்டுகளில் முதன்முறையாக ஃபாரஸ்ட், யுனைடெட்டின் சொந்த மண்ணான ஓல்ட் டிராஃபர்டில் வெற்றிபெற்றுள்ளது..
சனிக்கிழமையன்று (டிசம்பர் 7) நடைபெற்ற இதர பிரிமியர் லீக் ஆட்டங்களில் கிறிஸ்டல் பேலசும் லீக்கின் நடப்பு வெற்றியாளரான மான்செஸ்டர் சிட்டியம் 2-2 எனும் கோல் கணக்கில் சமநிலை கண்டன.
முன்னதாக எல்லாப் போட்டிகளிலும் தொடர்ந்து ஏழு ஆட்டங்களில் வெல்லாமல் இருந்தது சிட்டி. அந்த ஏழு ஆட்டங்களில் ஆறில் தோல்வியடைந்தது.
பின்னர் கடந்த வாரம் நொட்டிங்கம் ஃபாரஸ்ட்டை வென்றதைத் தொடர்ந்து சிட்டி மீண்டுவரும் அறிகுறிகள் தென்பட்டன. எனினும், மீண்டும் வெல்லத் தவறியது சிட்டி.
சென்ற வாரம் லிவர்பூலை வெல்லவிடாமல் செய்த நியூகாசல் யுனைடெட்டை 4-2 எனும் கோல் கணக்கில் வென்றது பிரென்ட்ஃபர்ட். ஆஸ்டன் வில்லா, சவுத்ஹேம்ப்டனை 1-0 எனும் கோல் கணக்கில் வென்றது.
லிவர்பூலும் எவர்ட்டனும் மேதிவிருந்த ஆட்டம் வானிலை காரணமாக ஒத்திவைக்கப்பட்டது.