லாஸ் வேகாஸ்: அமெரிக்காவில் தற்போது கோப்பா அமெரிக்கா காற்பந்து போட்டி நடந்து வருகிறது. ஞாயிற்றுக்கிழமை காலை நடந்த காலிறுதி ஆட்டத்தில் உருகுவே அணி பிரேசிலை பெனால்டிகள் மூலம் வீழ்த்தியது.
ஆட்டத்தின் முதல் 90 நிமிடங்களில் இரண்டு அணிகளும் கோல் அடிக்கவில்லை. அதனால் ஆட்டம் கூடுதல் நேரத்திற்கு சென்றது. அதன் பின்னரும் அணிகள் கோல் அடிக்காததால் ஆட்டம் பெனால்டிகளுக்கு எடுத்துச் செல்லப்பட்டது.
அதில் 4 - 2 என்ற கோல் கணக்கில் உருகுவே வெற்றிபெற்றது.
ஆட்டத்தின் 74வது நிமிடத்தில் உருகுவே அணியின் நகிடான் நென்டெசுக்கு சிவப்பு அட்டை காண்பிக்கப்பட்டது. கிட்டத்தட்ட 45 நிமிடங்கள் 10 வீரர்களுடன் பிரேசிலை உருகுவே சமாளித்து வெற்றிபெற்றுள்ளது.
ஜூலை 11ஆம் தேதி நடக்கும் அரையிறுதியில் கொலம்பியாவை உருகுவே சந்திக்கிறது. ஜூலை 10ஆம் தேதி நடக்கும் மற்றொரு அரையிறுதியில் கனடாவும் அர்ஜென்டினாவும் மோதுகின்றன.