நியூயார்க்: பெண்களுக்கான உலக சதுரங்க ‘பிலிட்ஸ்’ விளையாட்டுப் போட்டியில் சென்னையைச் சேர்ந்த ஆர். வைஷாலி வெண்கலம் வென்று அசத்தியுள்ளார்.
இவர் முன்னணி விளையாட்டாளர் பிரக்ஞானந்தாவின் சகோதரி என்பது குறிப்பிடத்தக்கது.
அதிவிரைவாகக் காய்களை நகர்த்த வேண்டிய இந்த சதுரங்கப் போட்டி அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெற்றது.
காலிறுதிச் சுற்றில் வைஷாலி சீனாவின் சூ ஜின்னரை 2.5 - 1.5 என்ற புள்ளிகளில் வீழ்த்தினார். அதன் பின்னர் வைஷாலி அரையிறுதியில் 0.5 - 2.5 என்ற புள்ளிகளில் சீனாவின் ஜூ வெஞ்சிடம் தோற்றார்.
ஜூ வெஞ் இறுதியாட்டத்தில் தமது சக நாட்டவரான லெய் டிஞ்சேவை 3.5-2.5 புள்ளிகளில் வீழ்த்தி பட்டத்தை வென்றார்.
‘பிலிட்ஸ்’ விளையாட்டுப் போட்டியில் சீன விளையாட்டாளர்கள் அதிக அளவில் ஆதிக்கம் செலுத்தினர்.
இந்திய கிராண்ட் மாஸ்டரான கொனேரு ஹம்பி உலக சதுரங்க ‘ரேபிட்’ விளையாட்டுப் போட்டியின் வெற்றியாளராக வாகை சூடினார்.
கடந்த 2024ஆம் ஆண்டு சதுரங்கப் போட்டிகளில் இந்திய வீரர்கள் எதிர்பார்ப்பை விஞ்சிச் சாதித்துள்ளனர்.