குழப்பம், விபத்து, தீ: ஒருவழியாக முடிந்த ஆஸ்திரேலிய எஃப்1 பந்தயம்

1 mins read
c45a538e-f28b-4a29-8a2b-8dcef98dffb1
படம்: ராய்ட்டர்ஸ் -

பல குழப்பங்களுக்கும் விபத்துகளுக்கும் இடையில் ஆஸ்திரேலிய ஃபார்முலா 1 கார் பந்தயம் நடந்து முடிந்துள்ளது.

இருப்பினும், அப்பந்தயத்தில் விறுவிறுப்புக்குப் பஞ்சம் இல்லை.

பந்தயத்தில் முதலிடம் பிடித்தார் ரெட்புல் ஓட்டுநர் மேக்ஸ் வெர்ஸ்டாப்பன்.

இரண்டாம் இடத்தில் மெர்சிடிஸ் அணியின் லூயிஸ் ஹேமில்டன் வந்தார். மூன்றாவது இடத்தில் ஆஸ்டன் மார்ட்டின் அணியின் ஃபெர்னாண்டோ அலோன்சோ வந்தார்.

பந்தயத்திற்கு இடையிலும் முடிவிலும் சில கார்கள் அடுத்தடுத்து விபத்துக்குள்ளானதால் குழப்பம் ஏற்பட்டது. சிறிது நேரம் பந்தயம் நிறுத்தியும் வைக்கப்பட்டது.

அதிகம் எதிர்பார்க்கப்பட்ட மெர்சிடிஸ் அணியின் ஜார்ஜ் ரசல் காரில் தீப்பிடித்ததால் பந்தயத்தின் பாதியிலேயே அவர் வெளியேறினார்.

இப்பருவத்தில் மூன்று பந்தயங்கள் முடிந்துள்ளன. பட்டியலில் 69 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார் வெர்ஸ்டாப்பன்.

54 புள்ளிகளுடன் செர்ஜியோ பெரஸ் இரண்டாம் இடத்திலுள்ளார். இவ்விருவரும் ரெட்புல் அணியைச் சேர்ந்தவர்கள்.

குறிப்புச் சொற்கள்