நியூகாசல்: இங்கிலிஷ் பிரிமியர் லீக் காற்பந்தாட்டத்தில் நியூகாசலை 2-0 எனும் கோல் கணக்கில் ஆஸ்டன் வில்லா தோற்கடித்தது.
இந்த ஆட்டம் ஞாயிற்றுக்கிழமையன்று (ஜனவரி 25) நியூகாசலின் செயிண்ட் ஜேம்சஸ் பார்க் விளையாட்டரங்கில் நடைபெற்றது.
ஆட்டத்தின் முற்பாதியில் வில்லாவின் எமிலியானோ யுயேண்டியா கோல் போட்டு தமது குழுவை முன்னிலைக்குக் கொண்டு சென்றார்.
இருப்பினும், மனந்தளராமல் நியூகாசல் தொடர்ந்து போராடியது.
அது இடைவிடாது கோல் முயற்சியில் இறங்கியது.
ஆனால், ஆட்டத்தின் 88வது நிமிடத்தில் ஒல்லி வாட்கின்ஸ் தலையால் முட்டிய பந்து வலைக்குள் புகுந்து வில்லாவுக்கு மூன்று புள்ளிகளைப் பெற்றுத் தந்தது.
இந்த வெற்றியின் மூலம் லீக் பட்டியலில் மூன்றாவது இடத்துக்கு முன்னேறியுள்ளது.
இரண்டாவது இடத்தில் உள்ள மான்செஸ்டர் சிட்டியைப் போலவே அது 46 புள்ளிகளைப் பெற்றுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
நியூகாசல், 33 புள்ளிகளுடன் ஒன்பதாவது இடத்தில் உள்ளது.

