தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சதமடித்தார் கோஹ்லி; இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள ஐபிஎல்

1 mins read
4424731d-8abc-4a76-a816-78501257b906
படம்: டுவிட்டர்/ ஐபிஎல் -

ஐபிஎல் வரலாற்றில் அதிக சதம் அடித்த வீரர்கள் பட்டியலில் விராத் கோஹ்லி முதலிடத்திற்கு முன்னேறினார். இதுவரை அவர் 6 சதங்கள் விளாசியுள்ளார்.

வெஸ்ட் இந்தீஸ் அணியின் கிறிஸ் கெய்லுடன் அவர் முதலிடத்தை பகிர்ந்து கொண்டுள்ளார்.

வியாழக்கிழமை ( மே 19) இரவு நடந்த ஆட்டத்தில் ஹைதராபாத் அணியும் பெங்களூரு அணியும் மோதின.

ஆட்டத்தை வெல்ல வேண்டிய கட்டாயத்தில் பெங்களூரு களமிறங்கியது.

முதலில் பந்தடித்த ஹைதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழந்து 186 ஓட்டங்கள் எடுத்தது.

சிறப்பாக விளையாடிய கிளாசன் 51 பந்தில் 104 ஓட்டங்கள் குவித்தார்.

கடினமான இலக்கை விரட்டிய பெங்களூரு அணிக்கு கோஹ்லியும் டூபிளஸிசும் அருமையான தொடக்கம் தந்தனர்.

கோஹ்லி 63 பந்தில் சதமடித்தார். டூபிளஸிஸ் 71 ஓட்டங்கள் எடுத்தார்.

இறுதியில் பெங்களூரு அணி 19.2 ஓவரில் வெற்றி இலக்கை எட்டி புள்ளிப்பட்டியலில் நான்காவது இடத்திற்கு முன்னேறியது.

ஐபிஎல் வரலாற்றில் ஒரே ஆட்டத்தில் இரு அணி வீரர்களும் சதம் அடிப்பது இதுவே முதல்முறை.

ஐபிஎல் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது, முதல் நான்கு இடங்களைப் பிடிக்க கடும் போட்டி நிலவுகிறது.

குஜராத் அணி மட்டும் தற்போது பிளே ஆஃப் சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளது.

குறிப்புச் சொற்கள்