சச்சின் சாதனையை முறியடித்தார் கோஹ்லி

அனைத்துலக கிரிக்கெட் போட்டிகளில் அதிவேகமாக 25,000 ஓட்டங்களை எடுத்து சச்சின் டெண்டுல்கரின் சாதனையை விராத் கோஹ்லி முறியடித்துள்ளார். 

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 2வது டெஸ்ட், 3வது நாள் ஆட்டத்தில் 20 ஓட்டங்களை எடுத்த கோஹ்லி இந்தப் புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளார். 

அனைத்துலகப் போட்டிகளில் 25,000 ஓட்டங்களைக் கடப்பதற்கு சச்சின் 577 ஆட்டங்களை எடுத்துக்கொண்டார். ஆனால், 549 ஆட்டங்களில் 25,000 ஓட்டங்களைக் கடந்துவிட்டார் கோஹ்லி. 

ஆஸ்திரேலிய அணியின் ரிக்கி பான்டிங் 588 ஆட்டங்களிலும் தென்னாப்பிரிக்காவின் ஜேக்குவஸ் காலிஸ் 594 ஆட்டங்களிலும் குமார் சங்கக்கரா 608 ஆட்டங்களிலும் ஜெயவர்த்தனே 701 ஆட்டங்களிலும் 2525,000 ஓட்டங்களைக் கடந்தனர்.

இந்நிலையில், கோஹ்லி 105 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 8,131  ஓட்டங்களை குவித்துள்ளார். 

இதேபோன்று 271 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 12,809 ஓட்டங்களை கோஹ்லி எடுத்துள்ளார். 
115 டி20 போட்டிகளில் விளையாடி அவர் 4,008 ஓட்டங்களை குவித்துள்ளார்.

இவ்வாண்டு இறுதியில் நடைபெறவுள்ள உலகக் கிண்ண ஒருநாள் கிரிக்கெட் போட்டியில், கோஹ்லி முக்கிய ஆட்டக்காரராக இருப்பார் என்று பல்வேறு கிரிக்கெட் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!