கோஹ்லி: ரொனால்டோதான் ஆகச் சிறந்த காற்பந்து வீரர்

கோஹ்லி: ரொனால்டோதான் ஆகச் சிறந்த காற்பந்து வீரர்

1 mins read
5d72e2f4-fd12-48ab-8474-e7f780abae7d
படம்: ஏஎஃப்பி -

தன்னைப் பொறுத்தவரை போர்ச்சுகலின் கிறிஸ்டியானோ ரொனால்டோதான் காற்பந்து வரலாற்றில் ஆகச் சிறந்த விளையாட்டாளர் என்று கூறியுள்ளார் இந்திய கிரிக்கெட் நட்சத்திரம் விராத் கோஹ்லி. இன்ஸ்டகிராம் சமூக ஊடகத்தில் இக்கருத்தை வெளியிட்டார் கோஹ்லி.

இவ்வாண்டின் உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டியின் காலிறுதிச் சுற்றில் போர்ச்சுகலை வென்று வெளியேற்றியது மொரோக்கோ. அந்த ஆட்டத்திற்குக் பிறகு பெரும் வருத்தத்திற்கு ஆளான ரொனால்ேடா திடலில் கண்ணீர் வடித்தது பல ரசிகர்களின் மனத்தை உறுக்கியது.

37 வயதாகியுள்ள ரொனால்டோ இனி உலகக் கிண்ணப் போட்டிகளில் பங்கேற்கமாட்டார் என்று சொல்லப்படுகிறது. எனினும், அது குறித்து அவர் தகவல் ஏதும் தெரிவிக்கவில்லை.

தான் என்றுமே போர்ச்சுகல் தேசிய அணிக்குக் கடமைப்பட்டுள்ளதாக மட்டும் ரொனால்டோ குறிப்பிட்டார்.

"இப்போதைக்கு வேறு ஏதும் சொல்வதற்கு இல்லை. நன்றி போர்ச்சுகல், நன்றி கத்தார். உலகக் கிண்ணத்தை வெல்லும் கனவு நனவானகும் சாத்தியம் இருந்தவரை அது மிகவும் அழகானதாக இருந்தது. இனி நல்ல ஆலோசனை வழங்கும் பொறுப்பைக் காலத்திடம் ஒப்படைக்கவேண்டும், அவரவர் ஊகங்களுக்கு வழிவிடலாம்," என்று ஃபேஸ்புக் பதிவில் கூறியிருந்தார் ரொனால்டோ.

ஐந்து உலகக் கிண்ணப் போட்டிகளில் கோல் போட்ட முதல் வீரர் என்ற பெருமையைப் பெற்றவர் ரொனால்டோ.