தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

இந்திய அணியுடன் இணைந்த விராத்

1 mins read
dfe89c12-8c8f-49e0-8fc2-cc63fe8c1ed3
அவசர காரணங்களுக்காக லண்டன் சென்றிருந்தார் விராத் கோஹ்லி. - கோப்புப்படம்: ஏஎஃப்பி

செஞ்சுரியன்: தென்னாப்பிரிக்கா, இந்திய கிரிக்கெட் அணிகள் முதல் டெஸ்ட் போட்டி வரும் 26ஆம் தேதி செவ்வாய்க்கிழமை செஞ்சுரியனில் தொடங்கவுள்ளது.

இந்நிலையில், குடும்பம் சார்ந்த காரணங்களுக்காக சில நாள்களுக்குமுன் லண்டனுக்கு அவசரப் பயணம் மேற்கொண்ட இந்திய அணியின் முன்னணி ஆட்டக்காரர் விராத் கோஹ்லி மீண்டும் தென்னாப்பிரிக்கா சென்று, இந்திய அணியுடன் இணைந்துள்ளார்.

லண்டன் செல்வதற்குமுன் தென்னாப்பிரிக்காவில் அவர் மூன்று நாள்கள் இந்திய அணியுடன் இணைந்து பயிற்சியில் ஈடுபட்டார்.

டிசம்பர் 15ஆம் தேதி தென்னாப்பிரிக்கா சென்ற அவர், அங்கிருந்து 19ஆம் தேதி லண்டன் புறப்பட்டுச் சென்றார்.

இரண்டாவது டெஸ்ட் போட்டி ஜனவரி 3ஆம் தேதி கேப்டவுனில் தொடங்குகிறது.

முன்னதாக, மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரை 1-1 எனச் சமன் செய்த இந்திய அணி, அதன்பின் நடந்த ஒருநாள் போட்டித் தொடரை 2-1 என்ற கணக்கில் வென்றிருந்தது.

இந்திய டெஸ்ட் அணி விவரம்: ரோகித் சர்மா (அணித்தலைவர்), ஜஸ்பிரீத் பும்ரா (துணைத் தலைவர்), ஷுப்மன் கில், யஷஸ்வி ஜெய்ஸ்வால், விராத் கோஹ்லி, ஷ்ரேயாஸ் ஐயர், கே எல் ராகுல், ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, ஷார்துல் தாக்குர், முகம்மது சிராஜ், முகேஷ் குமார், பிரசித் கிருஷ்ணா, அபிமன்யு ஈஸ்வரன்.

குறிப்புச் சொற்கள்