புதுடெல்லி: இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர ஆட்டக்காரரும் முன்னாள் தலைவருமான விராத் கோஹ்லி ஓர் உணவுப்பிரியர்.
என்றாலும், தமது உடற்தகுதியைப் பேணுவதற்காக உணவு வகைகளைத் தெரிவுசெய்து உண்ணும் கோஹ்லி, துரித உணவுகளை அறவே தொடுவதில்லை.
இவருக்குப் பிடித்தமான உணவுவகைகளில் ஒன்று, கொண்டைக்கடலை மசாலா.
இந்நிலையில், தாம் ஒருபோதும் உண்ணாத உணவு என்ன என்பதையும் தமது அண்மைய இன்ஸ்டகிராம் காணொளியில் கோஹ்லி குறிப்பிட்டுள்ளார்.
கசப்புச் சுவைக்குப் பெயர்போன பாகற்காய்தான் அது!
அத்துடன், 'என்ன வேண்டுமானாலும் கேளுங்கள்' என்ற அந்தக் கேள்வி-பதில் காணொளியில், தாம் உண்ட விசித்திரமான உணவு என்ன என்பதையும் கோஹ்லி பகிர்ந்துகொண்டார்.
"மலேசியாவில் ஏதோ ஒரு பூச்சி உணவு என்று நினைக்கிறேன். வறுத்த அந்த உணவைச் சாப்பிட்டதும் வெறுத்துப்போனேன்," என்றார் இவர்.
கோஹ்லி இப்போது முழுமையாக சைவத்திற்கு மாறிவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுவரை மூன்று மில்லியன் முறைக்குமேல் இந்தக் காணொளி பார்க்கப்பட்டுவிட்டது. கருத்து பதிவிட்டுள்ளோரில் பலரும் தங்களுக்கும் பாகற்காய் பிடிக்காது எனத் தெரிவித்துள்ளனர்.


