தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

உணவகத்தில் மகளுடன் கோஹ்லி!

1 mins read
இணையத்தில் பரவலாகும் புகைப்படம்!
3c88c87b-331b-4239-8ecd-b77f63e63328
லண்டனிலுள்ள ஓர் உணவகத்தில் மகள் வாமிகாவுடன் இந்திய கிரிக்கெட் வீரர் விராத் கோஹ்லி. - படம்: எக்ஸ் ஊடகம்

லண்டன்: இந்திய அணியின் நட்சத்திர கிரிக்கெட் வீரர் விராத் கோஹ்லி, அண்மையில் ஆண் குழந்தைக்குத் தந்தையானார்.

லண்டனில் குழந்தை பிறந்த நிலையில், அங்கு தன் குடும்பத்தினருடன் அவர் நேரம் செலவிட்டு வருகிறார்.

இந்நிலையில், கோஹ்லி தன் மகள் வாமிகாவுடன் லண்டனில் உள்ள ஓர் உணவகத்தில் இருக்கும் புகைப்படம் இணையத்தில் பரவலாகி வருகிறது.

கோஹ்லி மற்றும் அவரின் மனைவியும் நடிகையுமான அனுஷ்கா சர்மாவின் ரசிகர்கள், அப்படத்தைக் கண்டு மகிழ்ச்சியாகக் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.

இத்தாலியில் கடந்த 2017 டிசம்பர் 11ஆம் தேதியன்று கோஹ்லி - அனுஷ்கா திருமணம் நடைபெற்றது. 2021 ஜனவரி 11ஆம் தேதி அவர்களின் மகள் வாமிகா பிறந்தார்.

அதன்பின் அனுஷ்கா இரண்டாம் முறையாகக் கருவுற்றிருந்ததை அவர்கள் ரகசியமாக வைத்திருந்தனர்.

இந்நிலையில், 2024 பிப்ரவரி 15ஆம் தேதியன்று தங்களுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளதாகவும் அதற்கு ‘அகாய்’ என்று பெயரிட்டுள்ளதாகவும் சமூக ஊடகம் வாயிலாக அவர்கள் அறிவித்தனர்.

குறிப்புச் சொற்கள்