தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

கோஹ்லியின் சாதனையை முறியடித்த பாண்டியா

1 mins read
55b6a35a-c534-444c-8978-5c2dcbea8525
அதிக முறை சிக்சருடன் போட்டியை முடித்து வைத்தவர் என்ற சாதனையை முறியடித்த இந்திய கிரிக்கெட் வீரர் ஹார்திக் பாண்டியா. - படம்: ஏஎஃப்பி

குவாலியர்: டி20 கிரிக்கெட் போட்டிகளில் இந்தியாவின் முன்னணி நட்சத்திரம் விராத் கோஹ்லியின் வித்தியாசமான சாதனையை முறியடித்துள்ளார் சக ஆட்டக்காரரான ஹார்திக் பாண்டியா.

சிக்சர் அடித்து போட்டியை முடித்ததுதான் அச்சாதனை. இதுவரை ஐந்து முறை அவர் அவ்வாறு செய்துள்ளார்.

பங்ளாதேஷ் அணிக்கு எதிராக ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 6) நடந்த டி20 போட்டியில் பாண்டியா இச்சாதனையை நிகழ்த்தினார். முன்னதாக, கோஹ்லி நான்கு முறை சிக்சருடன் போட்டியை முடித்து வைத்ததே சாதனையாக இருந்தது.

பங்ளாதேஷ் அணிக்கு எதிரான போட்டியில் பாண்டியா பந்துவீச்சிலும் பந்தடிப்பிலும் மிளிர்ந்தார். நான்கு ஓவர்களை வீசி, 26 ஓட்டங்களை விட்டுத்தந்து ஒரு விக்கெட்டை அவர் வீழ்த்தினார். பின்னர் அதிரடியாகப் பந்தடித்த அவர், 16 பந்துகளில் ஐந்து பவுண்டரி, இரண்டு சிக்சருடன் ஆட்டமிழக்காமல் 39 ஓட்டங்களைக் குவித்தார்.

அப்போட்டியில் முதலில் பந்தடித்த பங்ளாதேஷ் அணி 19.5 ஓவர்களில் 127 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தது. அந்த இலக்கை 11.5 ஓவர்களிலேயே எட்டி, ஏழு விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றிபெற்றது.

மூன்று விக்கெட்டுகளைக் கைப்பற்றிய இந்திய அணி வேகப் பந்துவீச்சாளர் அர்ஷ்தீப் சிங் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.

மூன்று போட்டிகள் கொண்ட தொடரின் இரண்டாவது போட்டி வரும் புதன்கிழமை (அக்டோபர் 9) டெல்லியில் நடக்கவிருக்கிறது.

குறிப்புச் சொற்கள்