சிட்னி: ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் தொடக்க ஆட்டக்காரரான டேவிட் வார்னர், 37, ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வுபெறுவதாக அறிவித்துள்ளார்.
வரும் புதன்கிழமை (ஜனவரி 3) பாகிஸ்தானுக்கு எதிராகத் தொடங்கும் போட்டியே அவரது கடைசி டெஸ்ட் போட்டியாக இருக்கும். இது அவருக்கு 112வது டெஸ்ட் போட்டி. இதுவரை அவர் டெஸ்ட் போட்டிகளில் 26 சதம், 36 அரைசதம் உட்பட 8,695 ஓட்டங்களைக் குவித்துள்ளார்.
அதேபோல, அவர் 161 ஒருநாள் போட்டிகளில் 22 சதம், 33 அரைசதம் உட்பட 6,932 ஓட்டங்களைக் குவித்துள்ளார்.
அதே நேரத்தில், டி20 போட்டிகளில் தொடர்ந்து விளையாடப் போவதாக வார்னர் அறிவித்துள்ளார்.