நெதர்லாந்து வீரரால் மெஸ்ஸி எரிச்சல் (காணொளி)

நெதர்லாந்து வீரரால் மெஸ்ஸி எரிச்சல் (காணொளி)

1 mins read
63cf13e7-bed2-4ef3-8d34-07b263841d3d
பயிற்சியின்போது காணப்படும் லயனல் மெஸ்ஸி. படம்: ராய்ட்டர்ஸ் -

அர்ஜென்டின காற்பந்து நட்சத்திரம் லயனல் மெஸ்ஸி, நெதர்லாந்து வீரர் ஒருவரால் எரிச்சலாவதைக் காட்டும் காணொளி ஒன்று சமூக ஊடகங்களில் பரவியது.

உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டியின் காலிறுதிச் சுற்று ஆட்டத்தில் பெனால்டிகளின் மூலம் நெதர்லாந்து அணியை வீழ்த்தியது அர்ஜென்டினா.

ஆட்டத்திற்குப் பிறகு செய்தியாளருக்குப் பேட்டியளித்த மெஸ்ஸி, செய்தியாளரைப் பார்த்து பேசாமல் வேறெங்கோ பார்த்தார்.

காணொளிப் பதிவாளருக்குப் பின்னால் அந்த நெதர்லாந்து வீரர் நின்றுகொண்டிருந்ததாகத் தெரிகிறது. அவர் மெஸ்ஸியை முறைத்துப் பார்த்ததாகக் கூறப்படுகிறது.

அப்போது அவரைப் பார்த்து முறைத்த மெஸ்ஸி, "நீ என்ன பார்க்கிறாய்? தொலைந்து போ" என்று ஸ்பானிய மொழியில் திட்டினார்.

அந்த நெதர்லாந்து வீரர் வோட் வெகோர்ஸ்ட் எனத் தெரிகிறது. அந்த ஆட்டத்தில் மாற்று ஆட்டக்காரராக களமிறங்கிய அவர், நெதர்லாந்து தரப்பில் இரு கோல்களைப் போட்டு ஆட்டத்தைக் கூடுதல் நேரத்திற்குக் கொண்டு சென்றார்.