லண்டன்: இங்கிலிஷ் பிரிமியர் லீக் காற்பந்து ஆட்டத்தில் மான்செஸ்டர் யுனைடெட்டை 2-1 எனும் கோல் கணக்கில் வெஸ்ட் ஹேம் தோற்கடித்தது.
இந்த ஆட்டம் வெஸ்ட் ஹேமின் லண்டன் விளையாட்டரங்கில் அக்டோபர் 27ஆம் தேதியன்று நடைபெற்றது.
ஆட்டம் தொடங்கிய சில நிமிடங்களிலேயே கோல் போட யுனைடெட்டுக்குப் பல வாய்ப்புகள் கிடைத்தன.
ஆனால் அவற்றை அது நழுவவிட்டது.
இடைவேளையின் போது ஆட்டம் கோல் ஏதுமின்றி சமநிலையில் இருந்தது.
ஆட்டத்தின் 74வது நிமிடத்தில் வெஸ்ட் ஹேம் குழுவின் மாற்று ஆட்டக்காரர் கிரிசென்சியோ சம்மர்வில் கோல் போட்டு தமது குழுவை முன்னிலைக்குக் கொண்டு சென்றார்.
ஆனால் ஏழு நிமிடங்கள் கழித்து யுனைடெட் ஆட்டத்தைச் சமப்படுத்தியது.
ஆனால் ஆட்டம் முடியும் கட்டத்தில் வெஸ்ட் ஹேமுக்கு பெனால்டி வாய்ப்பு வழங்கப்பட்டது.
தொடர்புடைய செய்திகள்
அதைக் கோலாக்கினார் ஜெரோட் போவன்.
இதுவே வெஸ்ட் ஹேமின் வெற்றி கோலாக அமைந்தது.
மற்றோர் ஆட்டத்தில் ஸ்பர்ஸ் குழுவை 1-0 எனும் கோல் கணக்கில் கிறிஸ்டல் பேலஸ் தோற்கடித்தது.