தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

கிரிக்கெட் வீரருக்கு அமெரிக்காவில் அரை ஏக்கர் நிலம் பரிசு

1 mins read
49975366-e6b4-4a59-a286-1401a178e380
நிலம் பரிசாகப் பெற்ற வெஸ்ட் இண்டீஸ் வீரர் ஷெர்ஃபேன் ரதர்ஃபோர்ட். - படம்: டுவிட்டர்/ஜிடி20 கனடா

ஆன்டேரியோ: டி20 கிரிக்கெட் தொடரின் நாயகனாகத் தெரிவுசெய்யப்பட்டவர்க்கு அமெரிக்காவில் அரை ஏக்கர் நிலம் பரிசாக வழங்கப்பட்டது.

அந்த நற்பேறு பெற்றவர் வெஸ்ட் இண்டீஸ் ஆட்டக்காரர் ஷெர்ஃபேன் ரதர்ஃபோர்ட்.

கனடாவில் நடந்த 2023 அனைத்துலக டி20 கிரிக்கெட் தொடரில்தான் இந்த வியப்பான நிகழ்வு இடம்பெற்றது.

மூன்றாம் முறையாக நடத்தப்பட்ட இந்த டி20 தொடர் கடந்த ஜூலை 20ஆம் தேதியிலிருந்து ஆகஸ்ட் 6ஆம் தேதிவரை இடம்பெற்றது.

இறுதிப் போட்டியில் மான்ட்ரியால் டைகர்ஸ் அணி ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் சரே ஜாகுவார்ஸ் அணியை வென்றது.

தொடர் முழுவதும் சிறப்பாக விளையாடிய ரதர்ஃபோர்ட், இறுதிப் போட்டியிலும் 29 பந்துகளில் 38 ஓட்டங்களை விளாசி தமது அணியின் வெற்றிக்கு முக்கியப் பங்களித்தார். அதனால் ஆட்ட நாயகன் விருதையும் அவரே தட்டிச் சென்றார்.

குறிப்புச் சொற்கள்