தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

அணித்தலைவர் பொறுப்பிலிருந்து விலகிய வில்லியம்சன்

1 mins read
8fd17c69-ad9f-4957-8c70-9004409dee0a
வில்லியம்சனின் இந்த முடிவு நியூசிலாந்து கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. - படம்: ராய்ட்டர்ஸ்

வெலிங்டன்: நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் டி20, ஒருநாள் போட்டிகளுக்கான அணித்தலைவர் பொறுப்பில் இருந்து கேன் வில்லியம்சன் விலகியுள்ளார்.

மேலும் அவர் 2024/25 ஆண்டுக்கான நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் ஒப்பந்தத்தில் இருந்தும் வெளியேறுவதாக அறிவித்துள்ளார்.

நியூசிலாந்து அணி தற்போது நடந்து வரும் டி20 உலகக் கிண்ணப் போட்டியின் முதல் சுற்றிலேயே வெளியேறியது. அதைத் தொடர்ந்து வில்லியம்சனின் அறிவிப்பு வெளியாகியுள்ளது. நியூசிலாந்து அணிக்கு வீரராகப் பல சாதனைகளை படைத்துள்ள வில்லியம்சன் அணித்தலைவராகவும் சிறப்பாக செயல்பட்டுள்ளார்.

அவரது தலைமையில் நியூசிலாந்து அணி கடந்த மூன்று டி20 உலகக் கிண்ணப் போட்டிகளிலும் அரையிறுதி சுற்றுக்குத் தகுதிபெற்று அசத்தியது.

டெஸ்ட், ஒருநாள், டி20 கிரிக்கெட் போட்டிகளில் தாம் தொடர்ந்து விளையாட இருப்பதாக 33 வயது வில்லியம்சன் புதன்கிழமை (ஜூன் 19) தெரிவித்துள்ளார்.

குறிப்புச் சொற்கள்