துபாய்: மகளிர் டி20 கிரிக்கெட் உலகக் கிண்ணத்தில் இந்திய அணி நியூசிலாந்து அணியிடம் தோல்வியடைந்தது.
‘ஏ’ பிரிவில் இடம் பெற்றுள்ள இந்திய அணி வெள்ளிக்கிழமை இரவு துபாயில் நடந்த தனது முதல் லீக் ஆட்டத்தில் நியூசிலாந்துடன் மோதியது.
முதலில் பந்தடித்த நியூசிலாந்து 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழந்து 160 ஓட்டங்கள் எடுத்தது. அணித்தலைவர் சோஃபி டெவின் 36 பந்துகளில் 57 ஓட்டங்கள் குவித்தார்.
சவாலான இலக்கை விரட்டிய இந்திய அணி தொடக்கத்தில் இருந்தே விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. முன்னணி ஆட்டக்காரர்கள் அடுத்தடுத்து வெளியேறியதால் இந்திய அணி ஓட்டங்கள் குவிக்காமல் ஆட்டத்தில் பின்தங்கியது.
இறுதியில், 19வது ஓவர்களில் 102 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 58 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி தோல்வியைத் தழுவியது.
ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 6) இரவு இந்திய மகளிர் அணி பாகிஸ்தான் மகளிர் அணியுடன் விளையாடவுள்ளது.
தற்போது மகளிர் டி20 கிரிக்கெட் உலகக் கிண்ணப் போட்டி ஐக்கிய அரபு சிற்றரசுகளில் நடைபெற்று வருகிறது.