உலகக் கிண்ணம் 2026: போர்ச்சுகல், காங்கோ சமநிலை

உலகக் கிண்ணம் 2026: போர்ச்சுகல், காங்கோ சமநிலை

1 mins read
2cdb5334-2bff-4627-8b53-50deb6476ba6
காங்கோவுக்கு கோல் போட்ட ஆர்த்தர் மசுவாக்கு. - படம்: இபிஏ

ஹூஸ்டன்: பல ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டிக்குத் தகுதிபெற்றுள்ள காங்கோ ஜனநாயகக் குடியரசு, கிறிஸ்டியானோ ரொனால்டோவின் போர்ச்சுகலை வெல்லவிடாமல் செய்துள்ளது.

அந்த ‘கே’ பிரிவு ஆட்டம் 1-1 எனும் கோல் கணக்கில் சமநிலையில் முடிந்தது.

ஆட்டத்தின் ஆறாவது நிமிடத்தில் ஜோவாவ் நெவெஸ் போர்ச்சுகலை முன்னுக்கு அனுப்பினார். முற்பாதியாட்டம் முடியவிருந்த நேரத்தில் ஆர்த்தர் மசுவாக்கு கோல் எண்ணிக்கையைச் சமப்படுத்தினார்.

இங்கிலாந்தின் அதிரடித் தொடக்கம்

போட்டியில் இங்கிலாந்து அதன் முதல் ஆட்டத்தில் அபார வெற்றிகண்டது. அந்த ‘எல்’ பிரிவு ஆட்டத்தில் குரோவே‌ஷியாவை 4-2 எனும் கோல் கணக்கில் வென்றது இங்கிலாந்து.

கோல் போட்ட பிறகு கொண்டாடும் இங்கிலாந்தின் ஜூன் பெல்லிங்கம் (வலது), ஹேரி கேன்.
கோல் போட்ட பிறகு கொண்டாடும் இங்கிலாந்தின் ஜூன் பெல்லிங்கம் (வலது), ஹேரி கேன். - படம்: ஏஎஃப்பி

ஹேரி கேன் (இரண்டு கோல்கள்), ஜூட் பெல்லிங்கம், மார்க்கஸ் ரே‌ஷ்ஃபர்ட் ஆகியோர் இங்கிலாந்தின் கோல்களைப் போட்டனர்.

கானா வெற்றி

‘எல்’ பிரிவின் மற்றோர் ஆட்டத்தின் கடைசி சில நிமிடங்களில் கோல் போட்டு பனாமாவை 1-0 எனும் கோல் கணக்கில் வென்றது கானா.

குறிப்புச் சொற்கள்
விளையாட்டுகாற்பந்துஉலகக் கிண்ணம்இங்கிலாந்து