உலகக் கிண்ணம் 2026: போர்ச்சுகலை வெல்லவிடாத காங்கோ

உலகக் கிண்ணம் 2026: போர்ச்சுகலை வெல்லவிடாத காங்கோ

2 mins read
2cdb5334-2bff-4627-8b53-50deb6476ba6
காங்கோவுக்கு கோல் போட்ட ஆர்த்தர் மசுவாக்கு. - படம்: இபிஏ

ஹூஸ்டன்: பல ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டிக்குத் தகுதிபெற்றுள்ள காங்கோ ஜனநாயகக் குடியரசு, கிறிஸ்டியானோ ரொனால்டோவின் போர்ச்சுகலை வெல்லவிடாமல் தடுத்துள்ளது.

இந்த ‘கே’ பிரிவு ஆட்டம் 1-1 எனும் கோல் கணக்கில் சமநிலையில் முடிந்தது.

ஆட்டத்தின் ஆறாவது நிமிடத்தில் ஜோவாவ் நெவெஸ் போர்ச்சுகலை முன்னுக்கு அனுப்பினார். முற்பாதியாட்டம் முடியவிருந்த நேரத்தில் காங்கோவின் ஆர்த்தர் மசுவாக்கு கோல் எண்ணிக்கையைச் சமப்படுத்தினார்.

கொலம்பியா 3 - 1 உஸ்பெக்கிஸ்தான்

மற்றொரு ‘கே’ பிரிவு ஆட்டத்தில், உலகக் கிண்ணப் போட்டியில் முதன்முறையாகப் பங்கேற்கும் உஸ்பெக்கிஸ்தானை 3-1 எனும் கோல் கணக்கில் கொலம்பியா வென்றது.

ஆட்டத்தின் 40வது நிமிடத்தில் டேனியல் முன்யோஸ் கொலம்பியாவை முன்னுக்கு அனுப்பினார். 60வது நிமிடத்தில் அபோஸ்பெக் ஃபெய்ஸுல்லாயெவ் எதிர்பாரா விதமாக கோல் எண்ணிக்கையைச் சமப்படுத்தினார்.

பின்னர் 65வது நிமிடத்தில் கொலம்பியாவின் நட்சத்திர வீரர் லூயிஸ் டியாஸ் மீண்டும் அணியை முன்னுக்கு அனுப்பினார். ஆட்டம் நிறைவடையவிருந்த நிலையில் ஹாமின்டோன் கம்பாஸ் கொலம்பியா வெற்றிபெறுவதை உறுதிப்படுத்தினார்.

லூயிஸ் டியாசின் கோலுக்குப் பிறகு கொண்டாடும் கொலம்பிய வீரரக்ள்.
லூயிஸ் டியாசின் கோலுக்குப் பிறகு கொண்டாடும் கொலம்பிய வீரரக்ள். - படம்: ராய்ட்டர்ஸ்

ஆட்டத்தில் கொலம்பியா வெற்றிபெற்றிருந்தாலும் உஸ்பெக்கிஸ்தான் விட்டுக்கொடுக்காமல் விளையாடியது ரசிக்கத்தக்க வகையில் அமைந்தது.

இங்கிலாந்தின் அதிரடித் தொடக்கம்

போட்டியில் இங்கிலாந்து அதன் முதல் ஆட்டத்தில் அபார வெற்றிகண்டது. ‘எல்’ பிரிவு ஆட்டத்தில் குரோவே‌ஷியாவை 4-2 எனும் கோல் கணக்கில் வென்றது இங்கிலாந்து.

கோல் போட்ட பிறகு கொண்டாடும் இங்கிலாந்தின் ஜூன் பெல்லிங்கம் (வலது), ஹேரி கேன்.
கோல் போட்ட பிறகு கொண்டாடும் இங்கிலாந்தின் ஜூன் பெல்லிங்கம் (வலது), ஹேரி கேன். - படம்: ஏஎஃப்பி

ஹேரி கேன் (இரண்டு கோல்கள்), ஜூட் பெல்லிங்கம், மார்க்கஸ் ரே‌ஷ்ஃபர்ட் ஆகியோர் இங்கிலாந்தின் கோல்களைப் போட்டனர்.

மார்ட்டினா பாட்டுரினா, பெட்டார் முசா ஆகியோர் குரோவே‌ஷியாவின் கோல்களைப் போட்டனர்.

இங்கிலாந்து, குரோவே‌‌ஷியா இரண்டும் அண்மை ஆண்டுகளில் அடிக்கடி அனைத்துலகப் போட்டிகளில் மோதிவருகின்றன. 2018ஆம் ஆண்டு உலகக் கிண்ணப் போட்டியின் அரையிறுதியாட்டத்தில் குரோவே‌ஷியா பெனால்டிகளில் இங்கிலாந்தை வென்று இறுதியாட்டத்துக்கு முன்னேறியது.

கானா வெற்றி

‘எல்’ பிரிவின் மற்றோர் ஆட்டத்தின் கடைசி சில நிமிடங்களில் கோல் போட்டு பனாமாவை 1-0 என வென்றது கானா.

கோல் போட்ட பிறகு கொண்டாடும் கானா வீரர்கள்.
கோல் போட்ட பிறகு கொண்டாடும் கானா வீரர்கள். - படம்: ராய்ட்டர்ஸ்

கானாவின் கேலப் யிரெங்யி ஆட்டத்தின் ஒரே கோலைப் போட்டார்.

குறிப்புச் சொற்கள்
விளையாட்டுகாற்பந்துஉலகக் கிண்ணம்இங்கிலாந்து