மையாமி: உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டியின் காலிறுதிச் சுற்றில் நார்வேயை 2-1 எனும் கோல் கணக்கில் அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளது இங்கிலாந்து.
ஆட்டத்தில் முதலில் நார்வே முன்னுக்குச் சென்றது. அதற்குப் பிறகு ஜூட் பெல்லிங்கம் இரு கோல்களைப் போட்டு இங்கிலாந்தை வெல்லச் செய்தார்.
ஆட்டம் 1-1 எனும் கோல் கணக்கில் சமநிலையில் முடிந்ததால் வெற்றிபெறும் அணியைத் தீர்மானிக்க ஆட்டம் கூடுதல் நேரத்துக்குச் சென்றது. கூடுதல் நேரம் தொடங்கி சிறிது நேரத்தில் பெல்லிங்கம் வெற்றி கோலைப் போட்டார்.

