தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மொரோக்கோவுக்கு ஆதரவு தரும் அல்ஜீரியர்கள்

1 mins read
55e2b377-f7fe-4453-bdf6-a0facfe27fab
லண்டனில் உள்ள மொரோக்கோ ரசிகர்கள். படம்: ராய்ட்டர்ஸ் -

உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டியில் வரலாறு படைத்துள்ள மொரோக்கோ உலகளவில் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது. பல நடுநிலை ரசிகர்களும் மொரோக்கோ ஒரு படி மேல் சென்று கிண்ணத்தையும் கைப்பற்றும் என்று நம்பிக்கை கொண்டுள்ளனர்.

மொரோக்கோவின் சாகசங்கள் ஆப்பிரிக்காவுக்கும் அரபு நாடுகளுக்கும் பெருமை தேடித் தந்துள்ள ஒரு நிகழ்வு.

எனினும், மொரோக்கோவுக்கும் அருகே இருக்கும் மற்றோர் ஆப்பிரிக்க நாடான அல்ஜீரியாவுக்கும் அரசியல் ரீதியான பிரச்சினைகள் இருந்து வந்துள்ளன.

இருப்பினும் அல்ஜீரியர்களும் மொரோக்கோவின் சாதனைகளை எண்ணிப் பெருமைப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேறுபாடுகள் இருந்தாலும் தங்களின் 'சகோதரர்களுக்கு' ஆதரவு வழங்கவேண்டும் என்றும் சில அல்ஜீரியர்கள் கூறினர்.

அடுத்ததாக உலகக் கிண்ணப் போட்டியின் அரையிறுதிச் சுற்றில் நடப்பு வெற்றியாளர் பிரான்சைச் சந்திக்கிறது மொரோக்கோ.