உலகக் கிண்ணம்: இதயப் பிரச்சினையிலிருந்து மீண்டுவந்த இறுதியாட்ட நடுவர்

உலகக் கிண்ணம்: இதயப் பிரச்சினையிலிருந்து மீண்டுவந்த இறுதியாட்ட நடுவர்

1 mins read
7f4b77b2-cfd7-4fbe-ac34-81a9e9e1b8ce
காலிறுதிச் சுற்றுக்கு முந்தைய சுற்றில் அர்ஜென்டினா-ஆஸ்திரேலியா ஆட்டத்தில் நடுவராக பணியாற்றினார் சிமோன் மார்சினியாக். படம்: ஏஎஃப்பி -

உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டியின் இறுதியாட்டத்திற்கு நடுவராக நியமிக்கப்பட்டுள்ள சிமோன் மார்சினியாக் 'டாக்கிகார்டியா' எனும் இதயப் பிரச்சினைக்கு ஆளானவர். இதயத்தை அதிவேகமாகத் துடிக்க வைக்கும் அப்பிரச்சினையால் இவர் சென்ற ஆண்டு நடைபெற்ற யூரோ 2020 போட்டியில் பணிபுரியமுடியாமல் போனது.

எனினும், இப்போது அப்பிரச்சினையிலிருந்து மீண்டுவந்து இவ்வாண்டின் ஆக முக்கியமான காற்பந்தாட்டத்தில் நடுவராகப் பணியாற்றவுள்ளார்.

உலகெங்கும் பலர் மிகுந்த ஆவலுடன் கண்டுகளிக்கவுள்ள இறுதியாட்டத்தைக் கையாளும்போது 41 வயது மார்சினியாக்கின் இதயம் மீண்டும் வேகமாகத்தான் துடிக்கும்; ஆனால் இவர்தான் இந்தப் பொறுப்புக்கு உகந்தவர் என்று கூறியுள்ளார் அனைத்துலகக் காற்பந்துச் சம்மேளனத்தின் நடுவர்கள் தலைவர் பியர்லுய்ஜி கொலினா.

மார்சினியாக் போட்டியில் இதுவரை சிறப்பாகச் செய்ததே அதற்குக் காரணம் என்றார் கொலினா.