அர்ஜென்டினா அணி உலகக் கிண்ணம் வென்றதை திங்கள்கிழமை 1,500 பேருக்கு இலவசமாக கோழி பிரியாணி வழங்கிக் கொண்டாடினார் இந்தியாவின் கேரள மாநிலம், திருச்சூரிலுள்ள 'ராக்லண்ட் ஹோட்டல்' உணவுக் கடையின் உரிமையாளர் ஷிபு.
அர்ஜென்டினா கிண்ணம் வென்றால் 1,000 பேருக்கு இலவச பிரியாணி வழங்குவதாக ஷிபு முன்னதாக அறிவித்திருந்தார். இந்நிலையில், திங்கள்கிழமை காலையிலேயே ஏராளமானோர் திரண்டதால் அந்த எண்ணிக்கையை 1,500ஆக அவர் உயர்த்தினார்.


