தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்: இந்திய அணிக்கு வாய்ப்பு மங்கியது

1 mins read
72fa87b5-1c4f-490a-b05d-cd3496631fb0
இந்திய அணியின் கடைசி விக்கெட்டை வீழ்த்தியதைக் கொண்டாடும் ஆஸ்திரேலிய சுழற்பந்துவீச்சாளர் நேதன் லயன். - படம்: ஏஎஃப்பி
multi-img1 of 2

மெல்பர்ன்: ஆஸ்திரேலிய அணிக்கெதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் தோற்றுப்போனதால் இந்திய கிரிக்கெட் அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டிக்குத் தகுதிபெறும் வாய்ப்பு மங்கியுள்ளது.

ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் நான்கு போட்டிகள் முடிந்துள்ள நிலையில், ஆஸ்திரேலிய அணி 2-1 என அசைக்க முடியாத முன்னிலை பெற்றுள்ளது.

நான்காவது போட்டியில் இந்திய அணி 184 ஓட்ட வித்தியாசத்தில் மண்ணைக் கவ்வியது.

இதனையடுத்து, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்கான புள்ளிப் பட்டியலில் இந்திய அணியின் வெற்றி விழுக்காடு மேலும் குறைந்துவிட்டது.

நான்காவது போட்டிக்குமுன் 55 விழுக்காட்டுடன் பட்டியலின் மூன்றாமிடத்தில் இருந்த இந்திய அணி, இப்போது 52.78 விழுக்காட்டுடன் அதே நிலையில் நீடிக்கிறது.

பாகிஸ்தான் அணிக்கெதிரான முதல் டெஸ்ட் போட்டியில் வென்றதன்மூலம், பட்டியலின் முதலிடத்திற்கு முன்னேறி, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டிக்கு முதல் அணியாகத் தகுதிபெற்றுவிட்டது தென்னாப்பிரிக்கா.

இந்நிலையில், ஆஸ்திரேலிய அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறும் வாய்ப்பு அதிகரித்துள்ளது. தற்போது அது 61.46 விழுக்காட்டுப் புள்ளிகளுடன் பட்டியலின் இரண்டாமிடத்தில் நீடிக்கிறது.

அடுத்ததாக, ஆஸ்திரேலிய, இந்திய அணிகளுக்கு இடையிலான ஐந்தாவது டெஸ்ட் போட்டி ஜனவரி 3ஆம் தேதி வெள்ளிக்கிழமை சிட்னியில் தொடங்கவுள்ளது.

அதன்பின், ஆஸ்திரேலிய அணி இலங்கைக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அந்நாட்டு அணியுடன் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் மோதவிருக்கிறது.

குறிப்புச் சொற்கள்