மல்யுத்தப் போட்டிகளிலிருந்து ஓய்வுபெறுவதாக ஜான் சீனா அறிவிப்பு

1 mins read
08c13372-1951-40ca-a12d-3bde3d771cb2
‘பிளாக்கர்ஸ்’ திரைப்படக் காட்சியில் ஜான் சீனா. - படம்: யுஐபி
multi-img1 of 2

வேர்ல்ட் ரெஸ்ட்லிங் எண்டர்டெயின்மண்ட் (டபிள்யூடபிள்யூஇ) மல்யுத்தப் போட்டிகளில் இருந்து ஓய்வுபெறுவதாக அமெரிக்காவின் பிரபல மல்யுத்த வீரர் ஜான் சீனா, 47, அறிவித்துள்ளார்.

கனடாவின் டொரொன்டோ நகரில் நடைபெற்ற போட்டி ஒன்றில் பேசிய அவர், 2025ல் லாஸ் வேகசில் நடைபெறும் ‘ராயம் ரம்பல்’, ‘எலிமினேஷன் சேம்பர்’, ‘ரெசல்மேனியா’ போட்டிகளே தாம் பங்குபெறும் கடைசிப் போட்டிகள் எனத் தெரிவித்தார்.

2001ல் டபிள்யூடபிள்யூஇ-வில் சேர்ந்த ஜான் சீனா, 2018லிருந்து பகுதி நேரமாக போட்டிகளில் பங்கெடுத்து வந்துள்ளார். தமது மல்யுத்தப் பயணத்தில் சாதனை அளவாக 16 உலக வெற்றியாளர் பட்டங்களை இவர் வென்றுள்ளார்.

டபிள்யூடபிள்யூஇ வரலாற்றில் மிகச் சிறந்த மல்யுத்த வீரர்களில் ஒருவராக இவர் கருதப்படுகிறார்.

குறிப்புச் சொற்கள்