இரண்டாவது தங்கப்பதக்கம் வென்ற யிப் பின் சியூ

1 mins read
221c1efe-6d2f-4ee9-80d7-cacd97ab937f
மகளிருக்கான 50 மீட்டர் மல்லாந்த நீச்சல் போட்டியில் சிங்கப்பூர் நீச்சல் வீராங்கனை யிப் பின் சியூ முதலிடம் பிடித்தார். - படம்: ஸ்போர்ட் சிங்கப்பூர் அமைப்பு

பாரிஸ்: பிரெஞ்சுத் தலைநகர் பாரிசில் பாராலிம்பிக் (உடற்குறையுள்ளோருக்கான ஒலிம்பிக்) போட்டிகள் நடைபெற்று வருகின்றன.

இதில் சிங்கப்பூரின் நீச்சல் வீராங்கனை யிப் பின் சியூ இரண்டாவது தங்கப்பதக்கத்தை வென்றுள்ளார்.

மகளிருக்கான 50 மீட்டர் மல்லாந்து நீச்சல் செய்யும் போட்டியில் யிப் முதலிடம் பிடித்தார்.

அப்போட்டியை அவர் 1 நிமிடம், 05.99 நொடிகளில் முடித்தார்.

மெக்சிகோவின் ஹாய்டீ அசிவேஸ் இரண்டாவது இடத்தையும் ஸ்பெயினின் தெரேசா பெராலேஸ் மூன்றாவது இடத்தையும் பிடித்தனர்.

ஆகஸ்ட் 29ஆம் தேதி நடைபெற்ற மகளிருக்கான 100 மீட்டர் மல்லாந்து நீச்சலில் 32 வயது யிப் முதல் தங்கப்பதக்கத்தை வென்றார்.

2016ஆம் ஆண்டு ரியோ டி ஜெனிரோ, 2020ஆம் ஆண்டு தோக்கியோ, 2024ஆம் ஆண்டு பாரிஸ் பாரலிம்பிக் போட்டிகளில் மகளிருக்கான 50 மீட்டர், 100 மீட்டர் மல்லாந்து நீச்சல் போட்டிகளில் யிப் தங்கம் வென்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

பாராலிம்பிக் போட்டிகளில் யிப் இதுவரை ஏழு தங்கப் பதக்கங்களையும் ஒரு வெள்ளிப் பதக்கத்தையும் வென்றுள்ளார்.

குறிப்புச் சொற்கள்