ரிஷப் பன்ட் மீண்டும் எழுச்சி பெறுவார் என்று அவரை நேரில் சந்தித்தபின் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் யுவராஜ் சிங் தெரிவித்துள்ளார்.
சமூக ஊடகம்வழி தமது கருத்தை யுவராஜ் வெளியிட்டுள்ளார்
கடந்த டிசம்பர் மாதம் மோசமான கார் விபத்தில் சிக்கி, கடுமையாகக் காயமடைந்தார் பன்ட்.
இதன் காரணமாக பன்ட்டால் ஐபிஎல் 2023 மற்றும் சில முக்கியமான தொடர்களில் பங்கேற்க முடியாமல் போனது.
இந்நிலையில், "பன்ட்டைப் பார்த்ததில் மகிழ்ச்சி. அவர் நம்பிக்கையுடனும் உற்சாகமாகவும் இருக்கிறார்," என்று யுவராஜ் கூறியுள்ளார்.
இந்திய அணி 2011ஆம் ஆண்டு ஒருநாள் போட்டிகளுக்கான உலகக் கிண்ணத்தை வென்றபோது, 'தொடர் நாயகன்' விருதைக் கைப்பற்றினார் யுவராஜ். அதே ஆண்டு அவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
ஆயினும், அந்நோயில் இருந்து மீண்டு, மீண்டும் அவர் அனைத்துலகப் போட்டிகளில் விளையாடியது குறிப்பிடத்தக்கது.

