தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

டி20 இந்திய அணியில் ரோகித்துடன் ஜெய்ஸ்வால் தொடக்க வீரராக களமிறங்க யுவராஜ் விருப்பம்

1 mins read
37541b96-4a3c-47ba-9fb2-f0c21292af90
ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடிவரும் யஷஸ்வி ஜெய்ஸ்வால். - படம்: ஏஎஃப்பி

புதுடெல்லி: அடுத்த மாதம் நடைபெறவிருக்கும் டி20 உலகக் கிண்ணக் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணித்தலைவர் ரோகித் சர்மாவுடன் தொடக்க பந்தடிப்பாளராக யஷஸ்வி ஜெய்ஸ்வாலை இந்திய அணி பயன்படுத்த வேண்டும் என்று முன்னாள் வீரர் யுவராஜ் சிங் கூறியுள்ளார்.

நடப்பு இந்தியன் பிரிமியர் லீக் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக விளையாடிவரும் விராத் கோஹ்லி, மிகச் சிறந்த ஆட்டத்திறனுடன் உள்ளார். பதினான்கு ஆட்டங்களில் 708 ஓட்டங்களைக் குவித்து, இப்பருவத்தில் ஆக அதிக ஓட்டங்களை எடுத்த வீரர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.

இந்நிலையில், பந்தடிப்பு வரிசையில் வலது கை பந்தடிப்பாளரான ரோகித்துடன் இடது கை வீரர் ஜெய்ஸ்வாலை இணைக்க யுவராஜ் விரும்புகிறார்.

தற்போது முன்னிலை டி20 பந்தடிப்பாளராகத் திகழும் சூர்யகுமார் யாதவ், வரிசையில் நான்காவது இடத்தைப் பிடிப்பது கிட்டத்தட்ட உறுதி.

2007ல் டி20 உலகக் கிண்ணத்தை வென்ற இந்திய அணியில் அங்கம் வகித்த யுவராஜ், “ரோகித்தும் ஜெய்ஸ்வாலும் நிச்சயமாக தொடக்க ஆட்டக்காரர்களாகத் திகழ வேண்டும்,” என்று அனைத்துலக கிரிக்கெட் மன்றத்திடம் கூறினார்.

குறிப்புச் சொற்கள்