தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

அணி மாறுகிறார் ஸிடான் மகன்

1 mins read
7b2688fe-cfe2-4f3f-bc54-4d41cb9b9d5f
கோல்காப்பாளரான லூக்கா ஸிடான் ஆப்பிரிக்க நாடான அல்ஜீரியாவிற்காக விளையாடவிருக்கிறார். - படம்: ஏஎஃப்பி

பாரிஸ்: பிரான்ஸ் காற்பந்து அணிக்கு உலகக் கிண்ணம் வென்று தந்து நட்சத்திரமாக மிளிர்ந்தவர் ஸினடின் ஸிடான்.

முன்னணி ஸ்பானியக் குழுவான ரியால் மட்ரிட் சார்பில் விளையாடி பல கிண்ணங்களை வென்றுதந்த அவர், பின்னர் அக்குழுவின் நிர்வாகியாகவும் செயல்பட்டு சிறந்து விளங்கினார்.

அவருடைய நான்கு மகன்களும் ரியால் மட்ரிட் பயிலகத்தில் பயிற்சிபெற்றவர்கள்தான்.

இந்நிலையில், அவரது இரண்டாவது மகனான லூக்கா ஸிடான் கோல்காப்பாளர் நிலையில் விளையாடி வருகிறார்.

தற்போது ஸ்பெயினின் கிரனாடா குழுவிற்காக விளையாடிவரும் லூக்கா ஸிடானும் தம் தந்தையைப் போல உலகக் கிண்ணப் போட்டிகளில் விளையாட விரும்புகிறார்.

ஆயினும், இளையர் பிரிவுப் போட்டிகளில் பிரான்சைப் பிரதிநிதித்துள்ள அவருக்கு முதன்மையான தேசிய அணியில் இடம் கிடைக்கவில்லை.

இதனையடுத்து, உலகக் கிண்ணப் போட்டிகளில் விளையாட வேண்டும் என்ற தமது கனவை நனவாக்கும் நோக்குடன் ஆப்பிரிக்க அணியான அல்ஜீரியாவிற்கு மாறியிருக்கிறார் லூக்கா ஸிடான். அதற்கு, அனைத்துலகக் காற்பந்துக் கூட்டமைப்பான ஃபிஃபாவும் ஒப்புதல் அளித்துவிட்டது.

ஸினடின் ஸிடானின் பெற்றோர் அல்ஜீரியாவைச் சேர்ந்தவர்கள் என்ற அடிப்படையில் லூக்கா ஸிடான் அந்நாட்டிற்காக விளையாடத் தகுதிபெற்றுள்ளார்.

கடந்த ஆண்டில் மட்டும் அனைத்துலக ஆட்டங்களில் நான்கு கோல்காப்பாளர்களை அல்ஜீரியா களமிறக்கிப் பார்த்துவிட்டது.

அடுத்த மாதம் நடக்கவுள்ள சோமாலியாவிற்கு எதிரான தகுதிச்சுற்று ஆட்டத்தில் வெல்வதன்மூலம் 2026 உலகக் கிண்ணப் போட்டிகளுக்கு அல்ஜீரியா தகுதிபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தென்னமெரிக்காவில் 2026 உலகக் கிண்ணப் போட்டிகள் நடக்கவிருக்கின்றன.

குறிப்புச் சொற்கள்