துபாய்: துபாய் உலகக் கண்காட்சி யில் தமிழ்நாட்டு அரங்கைத் தொடங்கிவைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின் அங்கு நடைபெற்ற பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளைக் கண்டு ரசித்தார்.
இதைத்தொடர்ந்து, துபாயில் உள்ள 2,217 அடி உயரம் கொண்ட, உலகிலேயே அதி உயரக் கட்டட மான புர்ஜ் கலீஃபாவில் 'தமிழ்' என்ற சொல் பிரம்மாண்டமாக ஒளிர்ந்தது.
அத்துடன், தமிழ்நாட்டின் வர லாறு, பண்பாடு, செம்மொழி, அண்மைய அகழ்வாராய்ச்சிகள் பற்றி ஒளிபரப்பப்பட்ட சிறப்புக் காணொளியையும் ரசித்த முதல்வா் மு.க. ஸ்டாலின், "இந்திய வரலாற்றைத் தெற்கிலிருந்து எழுதுவோம்," என பெருமிதம் தெரிவித்தார்.
தமிழ்நாட்டுக்கு தொழில் முதலீடுகளை ஈர்க்கும் விதமாக, நான்கு நாள் பயணமாக துபாய் சென்றுள்ள திரு ஸ்டாலின், 'துபாய் எக்ஸ்போ 2020' கண்காட்சியில் நேற்று பங்கேற்றார்.
தனது பயணம் குறித்து முதல்வர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், 'நம்பர் 1 தமிழ்நாடு' என்ற நிலையை அடைய ஐக்கிய அரபு சிற்றரசுப் பயணம் உதவும் என்ற நம்பிக்கை, அந்நாட்டு அமைச்சர்களுடனான சந்திப்பில் வலுப்பெற்றுள்ளது," எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையே, இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் துபாயில் உள்ள தனது இைசக்கூடத்திற்கு வருமாறு அழைப்பு விடுத்ததைத் தொடர்ந்து, அங்கு முதல்வர் சென்றார். அங்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ள 'மூப்பில்லா தமிழே தாயே' என்ற ஆல்பத்தை முதல்வருக்கு அவர் திரையிட்டுக் காண்பித்தார். இந்த நிகழ்வின்போது முதல்வரின் மனைவி துர்கா, உதயநிதி ஸ்டாலின், கிருத்திகா உதயநிதி ஆகியோர் உடனிருந்தனர்.

