(காணொளி உள்ளே) ஆழ்கடலுக்குள் திருமணம் செய்து அசத்திய ஜோடி

(காணொளி உள்ளே) ஆழ்கடலுக்குள் திருமணம் செய்து அசத்திய ஜோடி

2 mins read

தமிழகத்தில் கருத் தொருமித்த ஒரு திருமண ஜோடி தங்களது திருமணத்தை வித்தியாச மான முயற்சியாக பலரும் வியக்கும் வகையில் ஆழ்கடலில் நடத்தி பாராட்டுகளைப் பெற்றுள்ளது.

இந்தியாவில் ஆழ்கடலில் இந்து முறைப்படி திருமணம் நடைபெற்றது இதுவே முதல்முறை என்றும் கூறப் படுகிறது.

திருவண்ணாமலையைச் சேர்ந்த சின்னதுரை, கோவையைச் சேர்ந்த ஸ்வேதா ஆகிய இருவரும் சென் னையில் தகவல் தொழில் நுட்பத் துறையில் கணினிப் பொறியாளர் களாகப் பணியாற்றி வருகின்றனர்.

இவர்களுக்குத் திருமணம் செய்து வைக்க இருவீட்டினரும் முடிவு செய்தனர்.

Watch on YouTube

இதையடுத்து, ஆழ்கடல் நீச்சல் பயிற்சியாளரும் தன்னுடைய உற வினருமான அரவிந்தனிடம் தன்னு டைய விருப்பத்தை சின்னத்துரை கூறினார். உடனடியாக ஆழ்கடலில் திருமணத்தை நடத்துவதற்கான ஏற்பாடுகளும் நடந்தன.

இதையடுத்து, கடந்த 13ஆம் தேதி அன்று திருமண உடையில் ஆழ்கடல் பகுதிக்குப் படகில் சென்ற மணமக்கள் இருவருக்கும் 'ஆக்சிஜன் சிலிண்டர்' உபகரணம் பொருத்தப்பட்டது.

-

நீலாங்கரை அருகே உரிய பாதுகாப்பு முறை களுடன் கடலில் இறங்கி, 60 அடி ஆழத்துக்குச் சென்று, கடல்நீரில் நீந்தியபடியே மாலை மாற்றி, தாலி கட்டி திரு மணம் செய்துகொண்டனர்.

திருமணத்தை முன்னிட்டு, ஆழ்கடலுக்குள் இருக்கும் செடி களில் மலர்ந்த பூக்களைக் கொண்டு மணமேடை அமைக்கப் பட்டிருந்தது.

-

இந்தத் திருமணம் தொடர்பான புகைப்படங்கள், காணொளிகள் சமூக ஊடகங்களில் வேகமாகப் பரவியதுடன், பலரையும் ஆச்சரி யத்திலும் மூழ்கடித்துள்ளது.

மணமகன் சின்னதுரை, "நான் 12 ஆண்டுகளாக நீச்சல் பயிற்சி மேற்கொண்டு வரு கிறேன். ஸ்வேதாவிடம் ஆழ்கடலில் திருமணத்தை நடத்தலாம் என்று கூறியபோது முதலில் தயங்கினார். அதன்பிறகு நீச்சல் குளத்தில் மூன்று நாள்கள் பயிற்சி கொடுத் தோம். கடலிலும் பயிற்சி அளித் தோம். அதன்பிறகு என்னைவிட ஸ்வேதா தைரியமாகிவிட்டார். எங்கள் திருமணத்தை ஆழ்கடலில் நடத்த இன்னொரு முக்கியக் காரணம் ஒன்றும் இருக்கிறது. பிளாஸ்டிக் மற்றும்சில பொருள்களால் கடல் மாசுபட்டு வருகிறது. அதைத் தடுக்கவே ஆழ்கடலில் திருமணத்தை நடத்தியிருக்கிறோம். இந்த அனுபவம் வித்தியாசமானது," என்றார்.