சென்னை: கொரோனா இரண்டா வது அலையின் தாக்கத்தில் இருந்து மக்களின் விலை மதிப்பற்ற உயிர்களைக் காக்கும் வகையில், நாளை 31ஆம் ேததி காலை முதல் மேலும் ஒரு வார காலத்துக்கு தளர் வற்ற ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
இந்த ஊரடங்கு தருணத்தில் மளிகை, காய்கறி, பழக்கடைகள், இறைச்சி-மீன் கடைகள் திறக்கப் படாது.
அதேநேரத்தில் மருந்தகங்கள், நாட்டு மருந்துக் கடைகள் வழக்கம் போல் செயல்படும். உணவகங்களில் 'பார்சல்' சேைவ தொடரும் என்றும் தகவல்கள் தெரிவித்துள்ளன.
ஊரடங்கு குறித்து முதல்வர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கொரோனா கிருமிப் பரவல் சங்கிலியை உடைத்து, மக்களைப் பாதுகாக்கும் நோக்கத்திலேயே நாளை காலையுடன் முடிய இருந்த முழு ஊரடங்கு அடுத்த மாதம் 7ஆம் தேதி காலை வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
"அனைத்து மாவட்டங்களிலும் பொதுமக்களின் அன்றாட, அத்தியா வசியத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் நடைமுறையில் இருந்துவரும் நடமாடும் காய்கறி, பழங்கள் விற்பனை தொடரும்.
"நடமாடும் காய்கறி, பழ விற்ப னையைப் போன்றே மளிகைப் பொருட்களையும் அந்தந்த பகுதி களில் உள்ள மளிகைக் கடைகளும் வாகனங்கள் அல்லது தள்ளு வண்டிகள் மூலம் குடியிருப்புப் பகுதிகளுக்குச் சென்று விற்பனை செய்ய அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.
"இணையம் அல்லது தொலை பேசி வழி வாடிக்கையாளர் கோரும் பொருள்களை வீடுகளுக்கே சென்று காலை 7 முதல் மாலை 6 மணி வரை வழங்கலாம்," என குறிப்பிடப்பட்டு உள்ளது.
இதற்கிடையே, தமிழகத்தில் தொற்றுப் பாதிப்பில் முதலிடத்தில் உள்ள கோவையில் இன்று நேரில் ஆய்வு மேற்ெகாள்ள உள்ளார் முதல்வர். அங்கு பின்பற்றப்படும் தடுப்பு நடவடிக்கைகள், சிகிச்சை முறைகள் குறித்தும் மாவட்ட ஆட்சி யருடன் ஆலோசிக்க உள்ளார்.
கோவையில் கடந்த 24 மணி நேரத்தில் 3,937 பேர் கிருமி பாதிப் புக்கு ஆளாகி உள்ளதாக சுகா தாரத்துறை தெரிவித்துள்ளது.

