சென்னை: நவீன வசதிகளுடன் தயாராகும் புதிய ஒருங்கிணைந்த முனையம்

சென்னை: நவீன வசதிகளுடன் தயாராகும் புதிய ஒருங்கிணைந்த முனையம்

1 mins read

சென்னை விமான நிலையத்தில் கட்டப்பட்டுவரும் புதிய ஒருங்கிணைந்த முனையம் குறித்த தகவல்கள் அவ்வப்போது வெளியிடப்பட்டு வருகின்றன.

அதிநவீன உட்கட்டமைப்புடன் பயணிகளுக்குச் சிறப்பான வசதிகளை வழங்குவதற்கு அதிக முன்னுரிமை அளிக்கப்படுகிறது என்று இந்திய விமான நிலைய ஆணையம் டுவிட்டர் வாயிலாகத் தெரிவித்துள்ளது.

அவ்வகையில், 220,972 சதுரமீட்டர் பரப்பளவுடன் கூடிய புதிய ஒருங்கிணைந்த முனையத்துடன் அவ்விமான நிலையம் நவீனமயப்படுத்தப்பட்டு வருகிறது.

-

பாதுகாப்புச் சோதனையை விரைந்து முடிக்க ஏதுவாக புதிய முனையத்தில் 11 தானியக்கத் தட்டு மீளெடுப்பு அமைப்புகள் (Automatic Tray Retrieval Systems) நிறுவப்பட்டுள்ளன.

விமான நிலையத்தின் பன்னடுக்கு கார் நிறுத்துமிடத்தில் அதிநவீன புதிய திரையரங்க வளாகம் அமைக்கப்படுகிறது.

-

மாலை வேளைகளில் நண்பர்கள், குடும்பத்தினருடன் திரைப்படம் பார்த்து மகிழ சிறப்பான இடமாக அது விளங்கும் என்று சொல்லப்படுகிறது.

புதிய முனையத்தின் தனிச்சிறப்புமிக்க அம்சம் என்னவெனில் 'ஸ்கைலைட்' எனும் வானொளி அமைப்புதான். இயற்கையான வெளிச்சத்தை அது உள்வாங்கி, கட்டடத்தினுள்ளே அது பாய்ச்சும். இதன்மூலம் மின்சாரப் பயன்பாடும் குறையும்.

-

முக்கியமாக, வானொளியால் அவ்விடம் உயிரோட்டத்துடனும் காற்றோட்டத்துடனும் இருக்கும்.