தங்கப் புதையல்: சங்கிலியைக் கொடுத்து ரூ.10 லட்சம் மோசடி

தங்கப் புதையல்: சங்கிலியைக் கொடுத்து ரூ.10 லட்சம் மோசடி

2 mins read

கோவை: கட்­டு­மா­னப் பணிக்­காக குழி தோண்­டி­ய­போது தங்­கப்­பு­தை­யல் கிடைத்­த­தா­கக் கூறி மளி­கைக் கடை உரி­மை­யா­ள­ரி­டம் ரூ.10 லட்­சம் பணத்தை மோசடி செய்­து­விட்டு, தலை­ம­றை­வான கர்­நா­டக கும்­ப­லைக் காவ­லர்­கள் தேடி வரு­கின்­ற­னர்.

கோவை மாவட்­டம், கரு­மத்­தம்­பட்டி அருகே உள்ள வாக­ரா­யம்­பா­ளை­யத்­தைச் சோ்ந்த­வர் சதா­சிவம், 48.

மளி­கைக் கடை நடத்தி வரும் இவ­ரி­டம், கடந்த மே மாதம் ஆட­வர் ஒரு­வர் அறி­மு­க­மா­னார்.

அதே பகு­தி­யில் கட்­டட வேலை செய்­வ­தா­கக் கூறி, கடைக்கு அடிக்­கடி வந்து மளி­கைப்­பொ­ருள்­களை வாங்­கிச்­செல்­வார்.

இந்­நி­லை­யில், கட்­டு­மா­னப் பணிக்­காக அஸ்­தி­வா­ரம் போடு ­வ­தற்­காக குழி தோண்­டியபோது, தங்­கப் புதை­யல் கிடைத்­த­தா­கக் கூறிய அந்த ஆட­வர், இரு சரங்­கள் கொண்ட சங்­கி­லியைச் சதா­சி­வத்­தி­டம் காட்­டி­னார்.

அதன்­பி­றகு, சங்­கி­லி­யில் உள்ள அதேபோன்ற இரு முத்துகளை மட்டும் சதாசிவத்திடம் கொடுத்து அவை தங்­கமா என சோதித்­துப் பார்க்­கும்­படி கூறி­னார்.

சதா­சி­வம் நகைக்­கொல்­ல­ரி­டம் சென்று இரு தங்க முத்­து­க­ளை­யும் சோதித்­துப் பார்த்­த­தில் அவை தங்­கம்­தான் என உறுதியானது.

இதைத்­தொ­டர்ந்து, புதை­ய­லில் கிடைத்த தங்­கச் சங்­கிலி ஒரு கிலோ எடை­ கொண்டது எனக் கூறி, ரூ. 40 லட்சம் மதிப்புள்ள சங்கிலியை ரூ.10 லட்­சத்­துக்கு தரு­வதாக அந்த ஆட­வர் சதா­சிவத்­தி­டம் ஆசை­வார்த்­தை­க­ளைக் கூறி­யுள்­ளார்.

இதனை நம்­பிய சதா­சி­வம், ரூ.10 லட்­சம் கொடுத்து தங்­கச் சங்­கிலியை வாங்­கி­யுள்­ளார்.

சில நாள்­கள் கழித்து தங்கச் சங்கிலியைச் சோதித்­துப் பார்த்­த­போது அத்­த­னை­யும் பித்­தளை என்­பது தெரி­ய­வர, சதா­சி­வம் அதிர்ச்சி அடைந்­தார்.

அதன்பின்னா் அவரால் சங்கிலி யைக் கொடுத்த ஆடவ­ரைத் தொடா்பு­கொள்ள முடி­ய­வில்லை.

தான் ஏமாற்­றப்­பட்­டதை அறிந்த சதா­சி­வம் கரு­மத்­தம்­பட்டி காவல் நிலை­யத்­தில் புகார் அளித்­தார்.ஆனால், அங்கு எந்த நட­வ­டிக்­கை­ யும் எடுக்­கப்­ப­டா­த­தால், கோவை மாவட்­டக் காவல் கண்­கா­ணிப்­பாளா் பத்ரி நாரா­ய­ணனைச் சந்­தித்து சதா­சி­வம் மனு அளித்தாா்.

இது­தொ­டர்­பாக காவ­லர்­கள் விசா­ரணை நடத்தி வரு­கின்­ற­னர்.

இது­கு­றித்து சதா­சி­வம் கூறு­கை­யில், "ரூ.40 லட்­சம் மதிப்புள்ள சங்கிலியை ரூ.10 லட்­சத்துக்கு கொடுத்துள்ளோம். இது யாருக் காவது தெரிந்தால் அரசு அதி­கா­ரி­கள் தங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்றுவிடு­வார்­கள். எனவே ரக­சி­ய­மா­க ­வைத்­துக் கொள்­ளுங்­கள்," என்று கூறி­விட்டுச் சென்­றார்.

"மொத்தத்தில் நான் நம்பி ஏமாந்து போய்­விட்­டேன். என் பணத்தை மீட்­டுத் தரும்படி புகார் அளித்­துள்­ளேன்," என சதாசிவம் வேதனையுடன் கூறினார்.