தமிழ்நாட்டு கோவில் திருவிழாவில் பாரந்தூக்கி கவிழ்ந்ததில் நால்வர் மரணம்

1 mins read

தமிழ்நாட்டில் கோவில் திருவிழாவில் பாரந்தூக்கி கவிழ்ந்ததில் நால்வர் மாண்டனர். குறைந்தது ஐந்து பேர் காயமடைந்தனர். ராணிப்பேட்டை எனும் இடத்தில் அருகே உள்ள திரௌபதி அம்மன் கோவிலில் இந்தச் சம்பவம் நடந்தது.

பாரந்தூக்கியில் கோவில் சிலைகளை ஏற்றிச்சென்றுகொண்டிருந்தபோது பாரந்தூக்கி கவிழ்ந்ததாக சம்பவத்தை பார்த்தவர்கள் குறிப்பிட்டனர். பாரந்தூக்கியில் எட்டு பேர் இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

சம்பவம் பதிவான காணொளி சமூகத் தளங்களில் பகிரப்பட்டு வருகிறது.

பாரந்தூக்கி ஓட்டுநர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக ராணிப்பேட்டை காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். பாரந்தூக்கி பயன்படுத்த அனுமதி வழங்கப்படவில்லையென்று கூறப்பட்டது.

மணலில் உள்ள ஏற்றத்தாழ்வினால் பாரந்தூக்கி கவிழ்ந்திருக்கலாம் என நம்பப்படுகிறது.

பொங்கல் திருவிழாவுக்கு இந்த திரௌபதி கோவிலில் ஊர்வலம் நடத்தப்படுவது வழக்கம்.