'வேட்பாளர் குறித்து ஓரிருநாளில் அறிவிப்போம்'

'வேட்பாளர் குறித்து ஓரிருநாளில் அறிவிப்போம்'

1 mins read

சென்னை: ஈரோடு கிழக்­குத் தொகுதி வேட்­பா­ளர் யார் என்­பது குறித்து இன்­னும் ஓரிரு நாள்­களில் அறி­விக்­கப்­படும் என்று அதி­முக கூட்­டணி சார்­பில் தமிழ் மாநில காங்­கி­ரஸ் தலை­வர் ஜி.கே.வாசன் தெரி­வித்­துள்­ளார்.

சென்­னை­யில் உள்ள த.மா.கா. கட்சி அலு­வ­ல­கத்­தில் அக்­கட்­சி­யின் தலை­வர் ஜி.கே.வாசனை அதி­முக முன்­னாள் அமைச்­சர்­கள் ஜெயக்­கு­மார், வளர்­மதி, கோகுல இந்­திரா, பெஞ்­ச­மின் ஆகி­யோர் சந்­தித்து நேற்று ஆலோ­சனை நடத்­தி­னர்.

அதன்­பின்­னர், ஜி.கே.வாச­னும் அதி­முக முன்­னாள் அமைச்­சர் ஜெயக்­கு­மார் உள்­ளிட்­டோ­ரும் கூட்­டாக செய்­தி­யா­ளர்­க­ளைச் சந்­தித்­துப் பேசி­னர்.

ஜி.கே.வாசன் கூறு­கை­யில், "தற்­போ­தைய சூழ்­நி­லை­யில் இடைத்­தேர்­தல் என்­பது முக்­கி­யத்­து­வம் வாய்ந்­தது. அதி­முக-த.மா.கா. கட்சி இடையே சுமூக உறவு இருந்து வரு­கிறது. எங்­க­ளது இலக்கு தேர்­த­லில் கூட்­டணிக் கட்சி வெற்றி பெற வேண்­டும் என்­பதே. ஈரோடு கிழக்குத் தொகுதி வேட்­பா­ளர் யார் என்­பது குறித்து ஓரிரு நாள்களில் அறி­விக்­கப்­படும். தேர்­த­லில் நிச்­ச­யம் வெற்றி பெறு­வோம். வாக்­கு­று­தி­களை நிறை­வேற்­றாத அர­சாக திமுக அரசு உள்­ளது," என்று கூறி­னார்.

முன்­னாள் அமைச்­சர் ஜெயக்­கு­மார் கூறு­கை­யில், கூட்­டணிக் கட்­சி­கள் இணைந்து வேட்­பா­ளரை முடிவு செய்­த­ பின்­னர் சின்­னம் குறித்து முடி­வெ­டுக்­கப்­படும் என்­றார்.