திருச்சி: தன் மலக்குடல் பகுதியில் ரூ.94 லட்சம் மதிப்புள்ள 1.141 கிலோ தங்கத்தை மறைத்து எடுத்துச் சென்ற ஆடவர் திருச்சி விமான நிலையத்தில் புதன்கிழமையன்று (ஜனவரி 29) பிடிபட்டார்.
அந்த ஆண் பயணி மலேசியத் தலைநகர் கோலாலம்பூரிலிருந்து AK-023 என்ற ஏர் ஏஷியா விமானம் மூலமாகத் திருச்சியை வந்தடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
அவரிடமிருந்து 24 கேரட் தூய்மையுடன் கூடிய 1,141 கிராம் எடையுள்ள ஒரு தங்கக்கட்டி கைப்பற்றப்பட்டது என்றும் அதன் மதிப்பு ரூ.9,453,185 என்றும் விமானப் போக்குவரத்துப் புலனாய்வுப் பிரிவு அதிகாரி ஒருவர் சொன்னார்.
“அவரது மலக்குடலில் மறைத்து வைக்கப்பட்டிருந்த பசை போன்ற பொருளிலிருந்து அந்தத் தங்கம் பிரித்தெடுக்கப்பட்டது,” என்றும் அவர் குறிப்பிட்டார்.
இச்சம்பவம் குறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது.


