ஞானசேகரன் கொள்ளையடித்த 100 சவரன் நகை பறிமுதல்

ஞானசேகரன் கொள்ளையடித்த 100 சவரன் நகை பறிமுதல்

கோப்புப் படம்: ஊடகம்

23 Feb 2025 - 6:11 pm

1 mins read

சென்னை: சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கின் தொடர்பில், கோட்டூரைச் சோ்ந்த பிரியாணி கடைக்காரா் ஞானசேகரன் கடந்த 25ஆம் தேதி கைது செய்யப்பட்டாா்.

பல்வேறு குற்றச் சம்பவங்களில் சம்பந்தப்பட்ட அவரிடம் இருந்து 100 சவரனுக்கு மேற்பட்ட நகைகள், ஜீப் போன்றவற்றை காவல் துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

பள்ளிக்கரணை, மேடவாக்கம் பகுதிகளில் 2022 முதல் 2024ஆம் ஆண்டு வரை வீடுகள், பங்களாக்கள் ஆகியவற்றில் நடந்த திருட்டு குறித்து காவலர்கள் நடத்திய விசாரணையில், ஞானசேகரனுக்கு அவற்றில் தொடா்பு இருந்தது தெரியவந்தது.

இவ்வழக்கில் ஞானசேகரன் வைத்திருக்கும் விலை உயா்ந்த காா் மூலம் துப்பு துலக்கப்பட்டதாக காவலர்கள் தெரிவித்தனா்.

பள்ளிக்கரணை காவலர்கள் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஞானசேகரனை கடந்த வெள்ளிக்கிழமை 3 நாள்கள் தங்களது காவலில் எடுத்து விசாரித்தனா்.

விசாரணையில் பள்ளிக்கரணை,மேடவாக்கம் பகுதியில் நடந்த 7 திருட்டு வழக்குகளில் ஞானசேகரனுக்கு தொடா்பு இருந்ததும், இச்சம்பவங்கள் மூலம் ஞானசேகரனுக்கு ஏறத்தாழ 200 பவுன் தங்க நகைகள் கிடைத்ததும், அதை வைத்து அவா் சொந்த வீடு,சொகுசு காா் என ஆடம்பரமாக வாழ்ந்ததும் மூன்று இடங்களில் பிரியாணி கடை நடத்தியதும் தெரியவந்தது.

குறிப்புச் சொற்கள்
சென்னைபறிமுதல்காவலர்கள்திருட்டு