சென்னை: தமிழகத்தில் சூரியசக்தி மின் நிலையங்கள்மூலம் உற்பத்தியாகும் மின்சாரத்தின் அளவு ஆயிரம் மெகாவாட்டைக் கடந்துள்ளது.
தமிழகத்தில் மின்கட்டணம் அதிகமாக உள்ளது. மேலும், தமிழ்நாடு மின்சார வாரியம் கடும் நஷ்டத்தில்தான் இயங்குகிறது.
இதையடுத்து, வீடு, கல்வி நிறுவனம் போன்றவற்றில் மேற்கூரை அமைத்து, சூரிய மின் உற்பத்தியில் ஈடுபட பலர் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
தமிழகத்தில் ‘ரூஃப் டாப் சோலார்’ எனப்படும் மேற்கூரை சூரியசக்தி மின் நிலையங்கள் திட்டத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.
உற்பத்தியாகும் மின்சாரத்தில், உரிமையாளர் பயன்படுத்தியது போக மீதியை மின் வாரியத்திற்கு விற்கலாம்.
கடந்த ஆண்டு இத்திட்டம் மத்திய அரசால் தொடங்கப்பட்டது.
சூரியசக்தி மின் நிலையம் அமைக்க 30,000 ரூபாயும், 2 கிலோ வாட்டிற்கு 60,000 ரூபாயும், அதற்கு மேல் 78,000 ரூபாயும் மானியமும் வழங்கப்படுகிறது. இதனால், பலரும் மின் நிலையம் அமைக்க ஆர்வம் காட்டி வருகின்றனர்.
தமிழகத்தில் அமைக்கப்பட்டுள்ள மேற்கூரை சூரியசக்தி மின் நிலையங்களின் தற்போதைய நிறுவுத்திறன் 1,024 மெகாவாட் என்றும் இவற்றை 77,398 பேர் அமைத்துள்ளனர் என்றும் அரசு தெரிவித்துள்ளது.